Showing posts with label கீரை. Show all posts
Showing posts with label கீரை. Show all posts

Sunday, 16 June 2013

எப்படியும் இதை படிச்சி முடிக்கிறதுக்குள்ள மழை வந்துடும்...


  என்னால் மழை வரப்போகுதுங்க..  ஆமாமாம்.. வழக்கத்துக்கு மாறா எதாவது அதிசியம் நடந்துட்டாஹப்பா மழை வர போகுதுன்னு சொல்வோம் ..! அதே.. அதே..! அதுக்காகத்தான் இந்த கீரை ரெசிபி! இதிலென்ன அதிசயம்னு கேட்கிறீங்களா? நம்ம கிச்சன் நாலெட்ஜ் அப்படி!
என்னவர் சொன்னார்..” காலேஜ்- தினம் நான் மட்டும்தான் முழுசா வயிறு ரொம்ப சாப்பிடேறேன்மா.. “
நானும் ரொம்ப பெருமையாகஅப்படியா..”
அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..  நீ கொடுக்கிற லஞ்சை எவனும் எடுக்கறதில்ல..”
உடனே எனக்கு செம கோவம் வந்து பூரிக்கட்டை அவர் தலைய பதம் பார்க்கும்னு விஷூவலா கற்பனை எல்லாம் பண்ணிக்கிடாதீங்க
நானும் பதிலுக்குஹா.. ஹா ன்னு சிரிச்சிட்டு..” அதுவரைக்கும் நான் எதை போட்டாலும் திங்கற நல்லவனா நீங்க மாட்டினதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சவங்கன்னு பெருமையா அவரை பீல் பண்ணினதோட ஓவர்.
 நான் நல்லா செய்யறதா எங்க வீட்ல பாராட்டுவது  சப்பாத்தியும் அதுக்கான ஸைட் டிஷ் சிலதும்தான்.
இந்த கீரை துவையல் என் ப்ரெண்டு சொல்லி கொடுத்தது. அளவெல்லாம் சொல்ல தெரியாது.  இது  நல்லா இல்லைன்னா நீங்க நல்லா செய்யலைன்னு அர்த்தம்.


  சுக்கா கீரை துவையல்
சுக்கா கீரை- இரண்டு கட்டு
தேவையான அளவு வேர்க்கடலை
தேவையான அளவு காய்ந்த மிளகாய்
தே.அளவு வெங்காயம் நறுக்கி வைத்தது.
முதலில் ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நீரில் அலசி வடிகட்டிய சுக்கா கீரையை போட்டு வதக்கி ஆறவைக்க வேண்டும். சுக்கா கீரை தண்ணி ஊற்றாமலே வெந்துவிடும். எனவே வதக்கும் போது கீரையை நீரே இல்லாத அளவு வடிகட்டிதான் கீரையை போட வேண்டும்.
இப்போது மிக்ஸியில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையையும், காய்ந்த மிளகாயையும் சேர்த்து நீருற்றாமல் அரைக்க வேண்டும் வேர்க்கடலை பொடிந்ததும் ஆற வைத்த கீரை அதற்கு தேவையான உப்பையும் போட்டு அரைக்க வேண்டும். இரண்டு சுற்றில் கீரை மசிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை கடைசியாக சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்த கீரை துவையலை போட்டு வதக்கி எடுத்து கொண்டால் சுவையான சப்பாத்தி ஸைட் டிஷ்  தயார்…!


( ஹா.. ஹா.. எப்படியோ சமையலையும், பதிவையும் தேத்தியாச்சு...)