Saturday, 1 June 2013

ஆன்மீகம் என்றால் என்ன...?

 இந்த கேள்வியை நம் பதிவர் தோழி அருணா செல்வம் கேட்டிருந்தாங்க.. அவங்க பதிவில் கருத்தாக போட நினைத்ததை இங்கு பதிவாக போட்டுவிட்டேன். இது எனக்கு தோன்றிய சிந்தனைகள்தான். இதுதான் சரி என்று சொல்லும் அளவிற்கு வயதோ, அனுபவமோ எனக்கு கிடையாது. குற்றமிருந்தால் பெரிது படுத்தாதீர்கள்.

ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை 
 எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்!  (வீடு, வாகனம்..இன்னும்பிற)  இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத   நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.அந்த ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது. தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது. இப்போது உணர்கிறான் தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல்  கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்.ஒரு இடத்தை சென்றடைய பல்வேறுவழிகள் இருக்கும் உதாரணமாக சைக்கிள், இருசக்கரவாகனம், பேருந்து  விமானம் ஏன் நடைப்பயணமாக கூட இருக்கலாம். இவை போலதான் ஆன்மாவை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர்.அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும்,     தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது. ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர். நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது. இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
     
   நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே ஆன்மீகம்.

ஆன்மிகம்னா எல்லாவற்றையும் துறந்துடறது இல்ல. நாம் போற பாதையில் ஒரு முள் இருந்தால் அதை எடுத்து யார் காலிலும் படாமல் எடுத்து ஓரமாக போடுவது கூட ஆன்மீகம்தான்! மற்றவர் துன்பம் அடையகூடாது என்று நினைக்கும் அந்த கருணை இறை நிலைதானே! இந்த இறை நிலையை ஒருமனிதன் தானாக உணர்ந்து செய்யும்போது அவனுக்கு ஆன்மீகம் தேவைப்படவில்லை.அவனை நாத்திகவாதி என்கிறோம்.போதனையால் உணர்ந்து செய்யும்போது ஆன்மீகம் தேவைப்படுகிறது.அவனை ஆத்திகவாதி என்கிறோம்.

 கலப்பட மனிதர்களால் நாத்திகமும் கூட ஆத்திகத்தை எதிர்த்து கொண்டிருப்பதுதான் அதன் வேலை என்ற நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாற்று கருத்துக்கள் கூட இருக்கலாம்.எனவே என் கருத்துக்களை சரி, தவறுகளுக்கு கொண்டு போகவில்லை.

( இவ்வளவும் பேசிவிட்டு உண்மைய சொல்லனும்னா இப்ப நிறைய சம்பாதிக்கனும்னா ஒண்ணு அரசியல், இல்ல சாமியார்(ஆன்மீகம்) அப்படின்னு இல்ல ஆயிடுச்சி.. இதெற்கெல்லாம் காரணம் ஆன்மாவை உணராத பேராசை பிடித்த மனிதர்களாகத்தானே இருக்கமுடியும்.. அப்ப உண்மையான ஆன்மீகம் எங்கே.. ? )

42 comments:

 1. ஏன் இப்பவே ஆன்மீகம்னு எல்லாம் இறங்கிட்டீங்க...

  ReplyDelete
  Replies
  1. கேள்விக்கு பதிலைத்தான் யோசிச்சேன்.. பெரிய அளவில் ஒன்றும் கிடையாது. மிக்க நன்றி

   Delete
 2. திருமூலர் கூறுவார்

  மனமது செம்மையானால்
  மந்திரங்கள்
  ஜெபிக்க வேண்டாம்

  என்னைப் பொறுத்த வரை
  இதுதான் உண்மையான
  ஆன்மீகம்.
  நன்றி சகோ

  ReplyDelete
 3. உண்மையான ஆன்மீகம் - உணர முடியும்... சொல்ல முடியாது...

  சுருக்கமாக - தன்னை பிறரிடம் காண்பது...

  ReplyDelete
 4. எளிய அருமையான நல்ல விளக்கம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அழகான அருமையான சிந்திக்க வைக்கும் கட்டுரை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. ரஞ்சிதா மாதிரி பக்தை கிடைத்தால் நானும் நல்ல ஆன்மீக வாதி ஆவேன்...ஹாஹாஹா...

  நல்ல கட்டுரை..

  ReplyDelete
  Replies
  1. அதற்கு முதலில் கோவையானாந்தா ஆக வேண்டுமே!
   மிக்க நன்றி

   Delete
 7. தனபாலன் அவர்கள் சொல்வது பொருத்தமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
  உங்கள் வயதுக்குமீறியே சிந்தித்திருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்...

  ஆன்மா உணர அவற்றை சாந்தப்படுத்த வாழ்க்கையின் இறுதிநாட்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்...

  வாழ்க்கையில் பெரும்பகுதியில் அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.... அதனால்தான் ஆன்மீகம் சரியான பாதையில் செல்லவில்லை...

  ReplyDelete
 9. arumaiyana vilakkam thozhi..ungal vilakkathai nan appadiye etrukolgiren..pirar thunbathai than thunbamaga ninaithale pothum..namum oru aanmeegavathithan..

  ReplyDelete
 10. அருமையான கருத்துகள்!

  ReplyDelete
 11. ***இவ்வளவும் பேசிவிட்டு உண்மைய சொல்லனும்னா இப்ப நிறைய சம்பாதிக்கனும்னா ஒண்ணு அரசியல், இல்ல சாமியார்(ஆன்மீகம்) அப்படின்னு இல்ல ஆயிடுச்சி.. ***

  Usually, spiritual thoughts are "very personal ones". It is between you and your mind/conscience! When it is used as "business tool" then we are talking about something else!

  ReplyDelete
 12. The Red Letters are golden ones. Glad to know you.

  ReplyDelete
 13. இப்ப நிறைய சம்பாதிக்கனும்னா ஒண்ணு அரசியல், இல்ல சாமியார்(ஆன்மீகம்) அப்படின்னு இல்ல ஆயிடுச்சி.. இதெற்கெல்லாம் காரணம் ஆன்மாவை உணராத பேராசை பிடித்த மனிதர்களாகத்தானே இருக்கமுடியும்.. அப்ப உண்மையான ஆன்மீகம் எங்கே.//

  நல்ல கேள்வி பதில்தான் யாரிடமும் இல்லை....!

  ReplyDelete
 14. ஆன்மாவை உணர்வதே ஆன்மீகம். அழகான, சரியான விளக்கம் உஷா. சூப்பர்! பகிரங்கப்படுத்தப்படாத பக்தி இன்னும் பல சாதாரணர்களிடம் மிளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆன்மீகப் பத்திரிகைகள் நனகு விற்பதே சாட்சி! பிரபலமாகாத பல எளிய நபர்களிடம் பக்தி உணர்வு பொங்கித் ததும்புகிறது. அந்த நபர்களிடம் தான் உணமையான ஆன்மீகம் உள்ளது!

  ReplyDelete
 15. கட்டுரையில் சில திருத்தங்கள் தேவைப் படுகிறது, நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன்............

  ReplyDelete
  Replies
  1. சரிங்க உங்க கருத்தை நேரம் கிடைக்கும் போது சொல்லுங்க.
   மிக்க நன்றி

   Delete
 16. என் கேள்விக்காக ஒரு பதிவையே இட்டதற்கு
  மிக்க நன்றி உஷா.
  அருமையாகவும் விளக்கியிருக்கிறீர்கள்.
  ஆனால் கடைசியில் “அப்ப உண்மையான ஆன்மீகம் எங்கே.. ? “

  இப்படி ஒரு கேள்வி இன்று எல்லோரிடமும் இருப்பதால்.... ஆன்மீகத்தின் சரியான தேடுதலும் இருந்து கொண்டே தான் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 17. இங்கே பதில் உண்டு.http://enadhuanmeegam.blogspot.com/2013/02/blog-post_1196.html?m=0

  ReplyDelete
 18. வணக்கம்

  கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
  நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

  ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

  இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

  நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

  இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

  திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

  உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
  இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

  அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

  லிங்க்ஐ படியுங்க.

  http://tamil.vallalyaar.com/?page_id=80


  blogs

  sagakalvi.blogspot.com
  kanmanimaalai.blogspot.in

  ReplyDelete
 19. என்னங்க என்ன ஆச்சு ஏன் இந்த ஆன்மிக நிலமை...நல்லாதானே இருந்தீங்க.... ஏதாவது ஆன்மிக இயக்கத்தில் சேர்ந்திட்டிங்களா என்ன

  ReplyDelete
 20. உங்களது ஆன்மீக தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் சமீபத்தில் தமிழக கோவில்கள் பற்றி தேடி கொண்டிருக்கும் போது http://www.valaitamil.com/temples.php என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் தமிழக கோவில்களின் அறிய தொகுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.

  ReplyDelete
 21. விசாலமான நல்ல பார்வை.
  செறிவான கட்டுரை.
  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 22. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆன்மீகம் என்பது மனிதனின் உளவியல் சார்ந்தது. சிலர் உணர சிலர் கடைசி வரைக்கும் உணராமல் மறுக காலம் காலமாக இந்த ஆன்மீக உணர்வு என்பது வளர்ந்து காசு தரும் தொழிலாக மாறியுள்ளது.

  ReplyDelete
 23. My 18 நான் ஆன்மீகம் கற்கலாமா

  ReplyDelete