(செவ்வாய் பற்றி படிச்சதுல புரிஞ்சது)
அப்படியா சங்கதி…?
செவ்வாய்க்கு ஃபோபோஸ், டெய்மாஸ் இரண்டு நிலாக்கள் உண்டு.
( அப்படியா .... இது “செவ்வாயின் இரண்டு நிலா இதிகாசம்..!” னு வைரமுத்து சார் எத்தனை வால்யூம் எழுத போறிங்க…?)
செவ்வாயின் ஈர்ப்பு விசை, புவி ஈர்ப்பு விசையில் 38 சதவீதமே உள்ளது.அதாவது பூமியில் ஒருவர் 100 கிலோ எடை இருந்தால் செவ்வாய்க் கோளில் 38 கிலோ மட்டுமே இருப்பார்.
( அப்படின்னா… மானாட மயிலாட ஷூட்டிங்கை அங்கேயே வச்சிக்கலாமே..? அப்புறம் நம் ஜட்ஜூங்க யாரும் குண்டுன்னு சொல்ல முடியாது இல்ல…? )
செவ்வாயில் ஒரு நாள் பூமியின் ஒரு நாளை விடசற்று அதிகமாக இருக்கிறது. ( அப்படியா..? சீக்கிரம் ஆபிஸை அங்க மாத்துங்கப்பா எக்ஸ்ட்ரா டூட்டி (தூங்கறதுதான்) பார்க்கலாம் ..!)
செவ்வாய்க்கும் பூமிக்கும் சிலஒற்றுமைகள் காணப்படுகின்றன ( அப்படின்னா நாம குடியேறிப்பிடலாம்… ரியல் எஸ்டேட் காரங்க எப்ப போக போறீங்க பிளாட் போட…?)
செவ்வாயில் அடிக்கடி புழுதிப் புயல் வீசுமாம்.
( அப்படியா..? புயல் நிவாரணம் தூள் கிளப்பும்..!)
பூமியைப் போலவே செவ்வாய்க்கும் பருவ காலங்கள் உண்டு ( அப்படின்னா.. டீன் ஏஜ்.. பருவம் எப்ப…?)
- ( ஒழுங்கா சயின்ஸ் புக் படிங்கன்னு சொன்னா… கேட்பிங்களா…? அதான் இப்படி…ஹி..ஹி…!)