"பாஸ்.." குரல்
கேட்டதும்
திரும்பினேன்.
வண்டியை
யூ டர்ன் அடித்து அருகில் வந்த கிரி “ என்ன மச்சான் ஊரையே மறந்துட்டியா.. வந்து வருஷக்கணக்கா ஆகுது?”
“ம்.. என்ன பண்றது நிறைய வேலைகள்.. எப்படி இருக்கே?”
“ ரொம்ப நல்லாருக்கேன்.. ஐயா நம்ம வார்டுக்கு கவுன்சிலர் தெரியுமில்ல..”
“ ம் அம்மா போன் பண்ணியிருந்தப்ப சொன்னாங்க.. என்னால நம்பவே
முடியலை கிரி.. நீ எப்படி அரசியலுக்கெல்லாம் போனேன்னு..”
“ அதெல்லாம் அப்புறம் பேசிக்கிடலாம்.. வா காபி சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போவே..” வண்டியில் ஏறிக்கொண்டேன்.
“என்ன தம்பி சௌக்கியமா”? விசாரித்த நாயரை பார்த்ததும்தான்.. வருடங்கள் கடந்து கொண்டிருப்பது தெரிந்தது. புன்னகைத்து பெஞ்ச்சில் அமர்ந்தேன். இதே கடையில்தான் எங்கள் கூட்டணி இருக்கும் என்னோடு கிரி, முருகு, ஜனா.. வெங்கி .. சுப்பு என்று தினமும் டீ குடிக்கும் சாக்கில் மணிக்கணக்காய் அரட்டை தொடரும். ஆனாலும் கிரி எங்கள் கூட்டணியில் சைலண்ட்டாக இருப்பான். எங்கள் அரட்டையை ரசிப்பதோடு சரி. எதிரில்
வரும்
பெண்களை
கூட
நிமிர்ந்து
பார்க்க
மாட்டான். அவன் அப்பாவை கண்டால் பயந்து கொண்டு நைஸாக நழுவி விடுவான்.
“கவுன்சிலர் தம்பி இந்தாங்க..” நாயர் பவ்யமாக கிரியிடம் க்ளாஸை தரும்போதுதான் அவனை கவனித்தேன். ஆளே மாறியிருந்தான்.. நெற்றியில்
சந்தன
கீற்றுடன்
தலையை
அழுந்த
வாரி
அக்மார்க்
நல்லவன்
என்ற
பாவனையிலிருந்து
மாறியிருந்தான்.
முரட்டுத்தனமும், அதிகாரத்தோரணையும் அவனிடம் ஒட்டி கொண்டிருந்தது.
“ பாஸ் நாளைக்கு
தோப்பு
பக்கமா
வாயேன்.. நிறைய பேசலாம் மச்சான்…”
வீட்டிற்கு
வந்ததும்
அம்மாவிடம்
கேட்டேன். “ மா.. கிரி இவ்வளவு மாறிட்டிருக்கான் இல்ல…?”
“ ஆமாம்டா.. அவனுக்கென்ன.. நல்லா செட்டிலாயிட்டான்..
போன
எலக்ஷன்ல
தோத்தவன்.. இந்த முறை ஜெயிச்சுட்டான். ஜெயிச்சதும்
நம்ம
வீட்டுக்கு
வந்து
வெள்ளி
டம்ளர்லாம்
குடுத்திட்டு
போனாண்டா…”
“ நீ
ஏம்மா
அதெல்லாம்
வாங்கினே?”
“ நான் எங்க வாங்கினேன்.. எவ்வளவு சொல்லியும் கேட்காம நானும் உங்க புள்ள மாதிரிதானே என்னை வாழ்த்துங்கன்னு வச்சிட்டு போய்ட்டாண்டா..”
எனக்கு
என்னமோ
மாதிரி
இருந்தது. கிரியை நல்லா கேட்கனும் போலிருந்தது.
மறு
நாள்
தோப்பு
பக்கம்
போனேன். கிரியுடன் வெங்கியும், சுப்புவும் இருந்தார்கள். கூடவே பாட்டில்களும்.
“ கிரி.. என்னால் நம்பவே முடியல.. இந்த பழக்கலாம் வேறயா? “
“ பாஸு இதை போய் பெரிசு படுத்தற? மாற்றம் தான வாழ்க்கை..
எனக்கு
சரின்னு
படறதை
ஜாலியா
செஞ்சுட்டு
போறேன்
மச்சான்…”
“ ம் குறுக்கு வழியில சம்பாதிக்கனும்னு நீயும் சாக்கடை ஆயிட்டே போலிருக்க…?”
“ வேற வழி இல்லைடா.. நம்ம குருப்ல வெட்டி பேச்சு பேசிக்கிட்டிருந்தாலும் படிக்கிற நேரத்துல படிச்சி நீ எஞ்சினியரா ஆயிட்டே.. முருகு கணக்கு வாத்தியார் ஆயிட்டான்… ஜனாவும் கவர்மெண்ட் உத்தியோகம். நாங்க
டிகிரி
பெயிலாகி
வெட்டியா
சுத்தி
ஒருத்தன்
கூட
மதிக்கலைடா.. எதையாவது பண்ணனுமே.. அதான் கட்சிக்கு போனேன்.. போன முறை மூணு லட்சத்துக்கு மேல என் பணத்தை போட்டு தோத்து உடைஞ்சிட்டேண்டா…
இந்த
முறை
நான்
நிக்கலைன்னேன்…
வெங்கியும், சுப்புவும்தான் விடலை. எப்படியும் ஜெயிச்சே ஆகனும்னு பக்காவா ப்ளான் பண்ணி வேலை செஞ்சாங்க..
“ ஆமா என்ன பண்ணியிருப்பிங்க… வீடு வீடா போய் கையில் கால்ல விழுந்து ஓட்டு கேட்டிருப்பிங்க…!” எகத்தாளமாய் கேட்டேன்.
“ நீ
சொன்னது
கரெக்ட்தான்.. எப்படியாவது
ஜெயிக்கனும்
அது
மட்டும்தான்
தெரிஞ்சது.. தலைக்கு
இருனூத்தி
அம்பதுன்னு
செலவு
பண்ணினேண்டா..
ஆனா
போட்ட
பணத்தை
எடுத்துட்டேன்…”
“.?. இப்ப பாரு ஊருக்குள்ள எனக்கு எவ்வளவு மதிப்புன்னு என்ன விட வயசானவன்லாம் என்ன பார்த்ததும் எழுந்து நிக்கிறான்…”சிரித்தான்.
அவன்
சிரிப்பு
என்னை
எரிச்சல்
படுத்தியது, “சரி என்னதான் பண்ண போற..?”
“ வாய்ப்பு வந்தால் எதிர்காலத்துல நான் அமைச்சரா கூட ஆவலாம். அப்ப நீ எங்கிட்ட என்ன வேணும்னாலும் உதவி கேளு..”
“ உனக்கு வெக்கமாயில்ல.. இப்படித்தான் பொழைக்கனுமா?”
“ ஏய்.. என்னப்பா சூடாகிற..? இப்ப
நம்ம
வார்டுக்கு
சொன்னதெல்லாம்
செஞ்சுட்டேன்பா..
“
“சரி நீ அடுத்த எலக்ஷன்ல எவன் கால்லயும் விழ கூடாது.. யாருக்கும் ஒத்த பைஸா கொடுக்காம
ஜெயிச்சு
காமிப்பா.. நான் உன்ன
நல்ல
அரசியல்வாதின்னு
ஒத்துக்கிறேன்…”
பெரிய
நகைச்சுவையை
கேட்டது
போல்
சிரித்தவன்…” பாஸ் நீ இன்னும் உலகத்த புரிஞ்சிக்காமயே படிச்சிட்ட… எவ்வளவுதான் பண்ணாலும் எலக்ஷன் டைமில்
கையை
காலை
பிடிக்கிறதும்..
ஓட்டுக்கு
ரூபா
கொடுக்கறதும்தான்
அந்த
நேரத்துக்கு
ஓர்க்- அவுட் ஆகும். .. இதெல்லாம் மாத்த முடியாது. நீ வேணா பாரு..
கூடிய
சீக்கிரத்துல
நான்
எவ்வளவு
உயரத்துக்கு
போறேன்னு…”
அதற்கு
மேல்
எனக்கு
அவன்
பேச்சை
கேட்க
எனக்கு
பிடிக்கவில்லை.
சென்னைக்கு
வந்து
சில
வருடங்களுக்கு
பிறகு
சித்தப்பா
பையன்
திருமணத்திற்கு
என்
மனைவி, பிள்ளைகளோடு
ஊருக்கு
சென்றேன்.
பேருந்தை
விட்டு
இறங்கியதும்..
சர்ரென்று
நாலைந்து
கார்
சைரன்
ஒலிக்க
அந்த சொகுசு
கார்
கடந்தது.. கிரிதான் தொகுதி எம்.எல்.ஏ வாம்.
அவன்
கார்
கண்ணாடியில்
தெரிகிறதோ
இல்லையோ
வழியில்
நின்றிருந்தவர்கள்
கும்பிடு
போட்டு
கொண்டிருந்தார்கள்.
“நேரம் டா..
அவன்
ஒரே
முறை
கால்ல
விழுந்து
ஓட்டை
வாங்கிட்டு
இப்ப
கெத்தா
அலையறான்.. நம்ம ஜனங்க அஞ்சு வருஷம் அவனை கும்பிட்டு கிட்டு இருப்பாங்க.. ஓட்டுக்கு காசு வாங்கற ஜனங்க இருக்கற வரை அரசியல்ல பிழைச்சிக்கிடலாம்.. “ முணு முணுத்தேன்.”
“ என்னங்க ஜனங்க ஓட்டுக்கு காசு கொடுக்க வர்றவனை விரட்டி நேர்மையா இருக்கறவனை எல்லாம் அடையாளம் கண்டுபுடிச்சி அரசியல்ல உட்கார வச்சா நாட்டோட தலை எழுத்தையே மாத்தலாம்…இல்ல..?” அப்பாவியாய் என் மனைவி கேட்க,
“ ஆமா நீயும் நானும் மாதிரி ஒரு பத்து பேர் யோசிச்சி என்ன பிரயோஜனம்? வரிசையாய் பறந்த கார்கள் எங்கள் மேல் புழுதி கிளப்பி இருந்தாலும் தலை நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தேன்…
******************
(மேலே உள்ள போட்டோ கூகுளில் எடுத்தது... கற்பனை கதைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை)