Monday 17 June 2013

பாதா மரத்துல கோதா முட்டை... திக்.. திக் நிமிடங்கள்...













ஊருக்கு   செல்லும் போதெல்லாம்
அந்த பாதாம் மரம்-
எள்ளி நகையாடும்
சின்ன வயதின்
பய உணர்வுகளை
சொல்லி
எப்படி தெரியும்? 
அடம் பிடித்த அச்சமயங்களில்
பணிய வைக்க
என் அண்ணன் உருவகித்திருந்த
பொய்தானென்று..!


     
********************
பாதாமரத்துல கோதாமுட்டை..”  

இப்படி சொல்லியே எங்கண்ணன் ஸ்கூல்

டேஸ்ல..நிறைய பயமுறுத்தியிருக்கு..! சாப்பிடலைன்னாஅவர் பேச்சை கேட்கலைன்னா. .தோட்டத்தின் கடைசியில் தெரியும் அடர்ந்த அந்த பாதாம் மரத்தை காண்பிக்கும்.“ ஏய்.. அந்த பாதாம் மரத்துல கோதா முட்டை தெரியுதா?”என்பார்.நான் பயத்துடன் விழிக்க..அவர் குரலை மெதுவாக்கி..“  நாந்தான் கோதா முட்டை உங்கண்ணன் சொல்றதை கேட்கலைன்னா புடிச்சுக்குவேன்…” அப்படின்னு மிமிக்ரி செய்ய..  அப்பஉண்மைன்னு நம்பி… 

இல்ல..இல்ல கேக்குறேன்னு..”தேம்பி தேம்பி அழுததை இப்ப நினைச்சா சிரிப்பாத்தான் இருக்கு.

அப்ப மூளை வேலை செய்யலை..“ ஏய்.. ‘கோதா முட்டைஹண்ட்ரடு ரூபிஸ் தர்றேன்..எங்கண்ணனையே புடிச்சுக்கோன்னு சொல்ல…! ஹாஹா…!

உடன்பிறப்புகளின் சின்ன வயது சண்டைகள், குறும்புகள் நினைக்கும் போது மனதை ஆக்ரமிப்பது மகிழ்ச்சியாகத்தானே  இருக்கமுடியும்! ஆமா உங்க உடன் பிறப்புங்க எப்படியெல்லாம் பயமுறுத்தி  இருக்காங்க…?