Tuesday, 18 June 2013

சும்மா ஸீன் போடாதீங்கப்பா.. யாரவது ஒருத்தர் சொல்லித் தொலைங்க....



வசதியாய் அமைத்து விட்டு
வேடிக்கை பார்க்கிறது தனிமை...
வார்த்தைளின் வெறுமையில்
நீயும், நானும்
எதையோ
தேடி கொண்டிருப்பதாய்
பாசாங்கு..!
இருவருக்கும் புரிந்துதான் தொலைக்கிறது-
என்ன செய்ய…
மௌனத்தை உடைக்க
ஒரு சின்ன செருமல்
யாரிடம் புறப்படும் என்ற
இறுமாப்பில்தான்..
காத்திருக்கிறது-
நம் காதல்..!