Thursday 30 January 2014

நல்ல வேளை துடைப்பம் பிழைச்சுடுச்சி............

போன மாசம் வேலூர்ல தினமலர்-கோலப்போட்டி நடந்தது...  நானும் நம்ம வேலையை பார்க்கலாம்னு பெண்கள் மலர் பொங்கல் விழா பத்தி பேச போயிருந்தேன்... புது வாசக தோழிகள் சில பேர் “ எங்களுக்கும் தகவல் சொல்லி கூப்பிடுங்க..” ன்னு அவங்க பேரையும், போன் நெம்பரையும் எழுதி ஒரு பேப்பர்ல தந்தாங்க....

விழாவுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணி தகவல் சொல்லிட்டிருந்தேன்... அஞ்சாறு கால் வரை ஒழுங்காதான் போய்க்கிட்டிருந்துச்சு.... அடுத்துதான்,

“ ஹலோ”

“ ஹலோ சரஸ்வதி இருக்காங்களா?”

“ இல்லையே நீங்க யாருங்க?”

“ இல்லைங்க அவங்கதான் இந்த நெம்பர் தந்தாங்க...”

“ என்னங்க.. இது என் வூட்டுக்காரு நெம்பர்ங்க... நீங்க யார்ங்க...?”

“ ஓ.. ஸாரிங்க... நாந்தான் ராங் கால் பண்ணிட்டேன் போலிருக்கு...சரி வைச்சிடுங்க”

மறுபடியும் பேப்பரை செக் பண்ணப்ப நெம்பர் அதேதான்  ஆனா யாரோ கரெக்ட்டா ‘தப்பா ‘..எழுதி தந்திட்டாங்க போல... !சரி போயிட்டு போவுதுன்னு விட்டுட்டு  அடுத்த கால் பேசிக்கிட்டே போக,

இருபது நிமிஷத்துல  நான் போட்ட ‘ராங் கால் ‘லருந்து மறுபடியும் போன்..

“ ஹலோ”

அலறியடிச்சுக்கிட்டு ஒரு ஆண் குரல்,

“ ஹலோ யாருங்க... நீங்க?  எம் பொண்டாட்டி கால் மணி  நேரமா சாமி ஆடிட்டிருக்கா..  உங்க போனுக்கு பேசின பொண்ணு யாருன்னு ..கேட்டு..!”

 நான் கதையை சொல்லி முடிக்கவும்.... “ சரிங்க... இந்த உண்மையை அவகிட்டயே சொல்லுங்க....இதோ ஒட்டுதான் கேட்டுக்கிட்டு இருக்கா...ஏ இந்தாடி... அவங்களே பேசறாங்க....
.............. இல்லைங்க அந்த புள்ள வெட்கப்பட்டுக்கிட்டு ஓடி போயிருச்சு... உங்களுக்கு புண்ணியமா போவது ஒரு வழியா க்ளீயர் பண்ணிட்டிங்க... இல்லன்னா என் பாடு...” 

 நல்லவேளை அவங்க வீட்டு தொடப்பம் பிஞ்சு போகாம காப்பாத்திட்டோம்னு நினைச்சி..  ஹஹ் ஹா ஹா...!

(விசாரிச்சதுல ... பூரிக்கட்டை மொத்தம் அமெரிக்காவுக்கு போயிடறதால  இங்ஙன தொடப்பம்தானாம்...!)

*******************************
அன்பரசு : “ அம்மா தாயே நான் என்ன தப்பு பண்ணேன்மா.. இப்படி  கோவமா துடைப்பத்தை தூக்கிட்டு வர்றே...?!
 
உஷா:  “ டியர்  நீங்க தேவையில்லாம பயப்படறிங்க.. சமுதாயத்தில இருக்க குப்பையை சுத்தம் பண்ணதான் இத எடுத்தேன்..!”