உணவு பொருள் வீணாக்குவது பற்றி ஸ்ரீ சொல்லியிருந்தார் . உணவு பொருள் வீணாக்கும் போது பணம் வீணாவதோடு, எத்தனை பேரின் உழைப்பும் சேர்ந்து வீணாகிறது..? திருமண விருந்தில் ஆட்கள் அமருமுன்னே இலையில் அத்தனை வகையறாக்களையும் வைத்து விட்டு போய் விடுகிறார்கள்.. இதனால் நிறைய வீணாகிறது. இந்த மாதிரி பந்தா எதற்கு? உடம்பு வேண்டுமானால் சுமக்க முடியாமல் 100 பவுன் நகையை மாட்டிக்கொண்டு அந்தஸ்தை காண்பிக்கலாம்… ஆனா வயிறு 100 அயிட்டத்தை ஏற்றுக்கொள்ளாது . அதற்கு தேவையான அளவுதான் அது ஏற்றுக்கொள்ளும் . தேவைக்கு மீறி திணிச்சா வாமிட் தான். யோசிச்சு பார்த்தா நம்ம உடம்புல இருக்கிற உறுப்புகள்லே வயிறு நல்ல குணமான புள்ள… தேவைக்கு மீறி ஆசைப்படறதில்லை.. கைவிரல்ல பத்து மோதிரம் போட்டுகிட்டாலும் போட்டுக்குது… கழுத்து வலிச்சாலும் நாம் எவ்வளவு மாட்டிக்கிட்டாலும் போட்டுக்குது.. கண் இருக்குதே அது இன்னும். .. பார்க்கிற எல்லாத்துக்கும் ஆசைப்படும். ஸோ வயிறோட மனசறிந்து உபசரிப்பு இருந்தா போதாதா…? ஒரு சில கல்யாணங்கள்ல கொஞ்சமா தேவையான அயிட்டம் போடுவாங்க… ஆனா எதுவுமே வீணாகாமே கடைசி வரை யாருக்கும் இல்லை என்று குறை வராமல் கிடைக்கும். அந்த மாதிரி விருந்துதாங்க ஒஹோ..! ஆனா நம்ம சனங்க என்ன தெரியுமா பேசிகிட்டு போவாங்க.. “ க்கும்.. அப்படி ஒண்ணும் பிரமாதமில்ல.. சிம்பிளாதான் போட்டான்… ன்னு ..! ( அதுக்காக கிராண்டா இட்லி, பொங்கலை தங்கத்துலயா செய்ய முடியும்…? என்ன சிம்பிளோ…? என்ன கிராண்டோ…? போங்க… உலகம் ஜிகினா வாழ்க்கையில தான் போயிட்டிருக்கு…! தேவையான அளவு இருந்தால் கூட மேலும் மேலும் ஆடம்பரத்துக்குதான் ஆசைப்படறாங்க.. ஆசைப்படறதை ஏன் வேற மாதிரி ஆசைப்படக் கூடாது..? அறிஞர்கள் மாதிரி வாழ்ந்து நாளைய தலைமுறைக்கு உதாரணமா வாழ ஆசைப்படலாம்ல . வரலாற்றில இடம் புடிக்கலாம்ல.. அத எல்லாம் விட்டுட்டு பணம் பணம்… னு ஏன் ஆசை படனும்..? ஒரு கதராடைதான் வாழ்நாளுக்கு பிறகும் வரலாற்றில மகாத்மான்னு வாழ்ந்திட்டிருக்கு…! உலகி அழகி ஐஸ்வர்யவோ… அம்பானியோ எப்பவும் பேச பட போறதில்லை… அவரை விட அழகியும்… அவரை விட பணக்காரரும் வரும்போது பட்டியல்ல முத வரிசையிலிருந்து அடுத்த வரிசைக்கு போயிடுவாங்க. வாழ்கிற வாழ்க்கையில் கொள்கை, இலட்சியம் … சமுதாய தொண்டு நிரம்பி இருக்கும் போது அவங்க வரலாற்றிலே நிலைச்சி இருப்பாங்க. அவங்களோட தனித்தன்மை அப்படியே இருக்கும். !