நமக்கு முன்னோர்கள் உரல்ல மாவரைச்சி , கிணத்தில தண்ணி இறைச்சி துணி துவைச்சி.. விறகடுப்புல சமைச்சி மாங்கு மாங்குன்னு வீட்டு வேலை செஞ்சு இருக்காங்க… இப்ப நம்மால எல்லாத்துக்கும் மிஷின் என்றாலும் வேலை செய்ய முடியாம சலிச்சுக்கிறோம். இதற்கு நாம ஒரு சாக்கு வேற சொல்லிக்கிறோம்… அந்த காலத்து உடம்பு நல்லா ஸ்டார்ங்..ப்பா .. அவங்க சாப்பிட்டா மாதிரியா நாம சாப்பிடறோம்… ? அவங்களுக்கு வேற வேலை இல்ல… இப்ப மிஷின் லைப் பில் நாம எவ்வளவு விஷயம் கவனிக்க வேண்டியிருக்கு..? சரிதான்.. விஞ்ஞான வளர்ச்சியில் நமது நேரத்தை மிச்சப்படுத்த கூடிய விஷங்களை பயன் படுத்தி கொள்வது புத்திசாலித்தனம் தான். அவங்க மாட்டு வண்டியில போனாங்க… இப்ப மாட்டு வண்டியில போனா ஆபிசில் இன்னிக்கு போட வேண்டிய அட்டெணன்ட்ஸை மறு நாள்தான் போடமுடியும். ஆனா ஆரோக்கியம்…? அறுபது வயசுக்கு மேல கடைபிடிக்க வேண்டிய டயட்டை இப்ப இருபது வயசுக்கு மேலயே கடைபிடிக்க வேண்டியதாயிருக்கே..? அந்த காலத்து மனிதனோ, இந்த காலத்து மனிதனோ உடம்பு எல்லாருக்கும் ஒரே விதமாதானே இயற்கை படைச்சிருக்கு…? அந்த காலத்தில மெட்டல் உடம்பும், இந்த காலத்தில் பிளாஸ்டிக் உடம்புமா இயற்கை மாத்திடுச்சி. நாம கடை பிடிக்கிற வாழ்க்கை முறைகள் தான் நம்ம உடம்பை வலிமை இல்லாததாக மாற்றி கொண்டு வருக்கிறது. உணவு, உழைப்பு.. ஓய்வு இப்படி பல விஷயங்கள்ல நாம முன்னோர்களிடமிருந்து மாறுபட்டிருக்கோம்.
90 வயது கடந்த ஒரு பெரியவரை ‘எப்படி இந்த வயது வரை இவ்வளவு நலமுடன் இருக்கிற ரகசியம் என்ன ?’என்று கேட்ட போது, அதற்கு அவர்
ஓரடி நடவேன்
ஈரடி கிட வேன்
இருந்துண்ணேன்
கிடந் துறங்கேன்
என்றார். இதன் அர்த்தம் நடந்து சென்றாலும், தன் அடியில் தன் நிழல் இருக்கும் உச்சி பொழுதில் ஒரு வழியும் நடக்க கூடாது. ஈரமுள்ள இடத்தில் படுக்க கூடாது , முன்பு உண்ட உணவு செரிப்பதற்கு முன் உண்ணக்கூடாது, அயர்ந்த நேரம் தவிர மற்ற வேளைகளில் உறங்கி கிடக்க கூடாது.
உச்சி பொழுது மட்டுமில்ல.. எந்த பொழுதுமே நமக்கு வீட்டை விட்டு இறங்கிட்டா அடுத்த நடை ஒரு டூ வீலரையோ.. த்ரீ வீலரையோ.. போர் வீலரையோ நோக்கிதானே…! அயர்ந்த நேரம் என்ன… லீவு நாள் பூரா படுக்கையில் கிடந்து கிட்டே ஸ்நாக்ஸ் வித் டி.வி தானே… இப்படி எல்லாம் சோம்பேறியா இருக்கிறவரை பிளாஸ்டிக் உடம்புதான்…!