செவ்வாய்,
சந்திரன் கிரகங்களில் மனிதன் வாழ சாத்தியமா ன்னு ஆராய்ச்சி ஒரு பக்கம் நடந்துகிட்டிருந்தாலும் … எல்லா கோள்களிலுமே
மனுஷன் இருந்தால் ..ன்னு…? சும்மா ராக்கெட் மாதிரி யோசிச்சதுலதான் இந்த நியூஸ் எல்லாம்…..
!
வரதட்சினை
கொடுமை:
பூமியிலிருந்து
சந்திரனுக்கு திருமணமாகிப் போன நேமிகா என்ற பெண்ணிற்கு திருமணத்தின் போது தருவதாக சொன்ன
டாட்டா
‘ ராக்கெட் ‘.. – ஐ ஒரு வருடமாகியும் தராததால் கோபம் கொண்ட நேமிகாவின் மாமியார், நாத்தனார்
மற்றும் நாத்தனாரின் பாட்டி அடித்து துரத்தி விட்டனர். இதில் காலொடிந்த நேமிகா கண்ணீருடன்
கோளிஸ்டேஷனில் புகார் தந்தார். புகாரை விசாரித்த கோளிஸார் வரதட்சிணை கொடுமை செய்த மாமியாரை .. மாமியார்
வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
போராட்டம்:
புதன்
பார்க்கிலும், செவ்வாய் பீச்சிலும் காதலர்கள் அத்துமீறல்கள் அதிகமாக இருப்பதால் அங்கு
ரவுண்ட்ஸ் வந்த கோளிஸார் காதலர்களை விரட்டி எச்சரித்து அனுப்பினர். வெறிசோடிப்போன அந்த
பகுதியில் சுண்டல் மற்றும் பாப்கார்ன் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வியாபாரிகள்
இன்று முதல் காலவரையற்ற
உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விற்காமல் போன சுண்டலை சாப்பிட்டுக் கொண்டே போராட்டத்தை நடத்தினார்கள்.
வீட்டு
மனைகள் விற்பனைக்கு:
வியாழன்
எழில் நகரில் குறைந்த விலையில் வீட்டு மனைகள் . மனையின் சிறப்பம்சங்கள்.. ராக்கெட்
நிலையம் 10 அடி அருகில் (ஜம்ப் பண்ணி ராக்கெட்டை பிடித்துவிடலாம்). ஆக்ஸ்போர்டு பள்ளி
10 இன்ச் அருகில்( டீச்சர் நடத்துவது உங்கள் வீட்டிலேயே கேட்கும்) முதல் நூறு பதிவிற்கு
மச்சினியோடு சுக்கிரன் டூர் செல்ல இலவச ராக்கெட் டிக்கெட்.
சினிமா:
‘
வெள்ளி ‘ திரையில் நமீதா நடித்த 'மச்சான்ஸ் 'படம் நூறு நாள் ஓடியதால் நமீதா வீட்டின்
முன் வரலாறு காணாத அளவு புரடியுஸர்கள் கூட்டம்.
வீனஸில்
பத்து வருட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு பூமி திரும்பினார் ஷங்கர்.இன்னும் ஒரு வருடத்தில்
படம் வெளியாகும் என
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
வழிப்பறி
:
ராக்கெட்டில்
பயணம் செய்யும் பெண்களிடம் ஹேர்பேண்ட் திருடும் பலே திருடன் சனியில் பிடிபட்டான். இந்த
கொள்ளை கும்பல் பின்னனியில் பல பேன்ஸி கடைக் காரர்களுக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ
விசாரணை..!