Thursday 25 July 2013

யாருய்யா.. பணக்காரன்?




அவன் பெயர் கோவிந்த சாமி..
அலுவலகத்தில் துப்புறவு செய்பவன்........
அவன் ஒரு சுற்றுப்புற போராளியாகத்தான்
தெரிகிறான்..
கூட்டவும், அப்புறப்படுத்தவும்..
என்றைக்கும் சலித்ததில்லை...
அவனை சுற்றி  நடக்கும்
சச்சரவுகளோ , சந்தோஷங்களோ
எதுவுமே அவனை பாதிக்கவில்லை...
எப்போதும் லேசாய்  இருக்கிறான்....
நாம் ஆசைகளை கூட்டிக்கொண்டே இருக்கிறோம்..
அவன் குப்பையோடு எறிந்து விடுகிறான் போலும்...!
இலட்சியத்திற்கும் ஆசைக்கும் அர்த்தம் புரிகிறது...
தேவையின் ஆசையில் பிறக்கிறது நம் லட்சியம்..
அவன் வேலையை அழகாய் செய்வது மட்டுமே
அவனுக்கு லட்சியம்...!
பொய்யோ.. வஞ்சகமோ தேவைப்படாதவன்..
ஒரு உணவு பொட்டலத்திலும், தேனீரிலும்
நிறைவாக போய்விடுகிறான்...
இருக்கும் நிலையில் இருந்துவிட சொல்லவில்லை...
எட்டி பிடிக்கும் பயணங்களில்  சந்தோஷம் தொலைக்கும்...
நம்மிடையே-
அவன் அழகான செல்வந்தன்.. என்றேதான் உரைக்கிறேன்..!
******************************
இருக்கறதை வச்சி சந்தோஷமா இருக்கறவந்தாய்யா பணக்காரன். என் வீட்டு வேலைக்கார பெண்மணியின் ஒத்தை அறை கொண்ட ஓட்டு வீடு, செம்மண் பூசி... பச்சரிசி கோல மாவில் ஜொலிக்கிறதய்யா எந்த ஆடம்பர பொருளுமில்லாம...! புருஷன், பொண்ணு, புள்ளன்னு உழைக்கிறாங்க... சந்தோஷமா சாப்பிடறாங்க...! நாளைய பத்தி கவல... இல்ல.. கஷ்டம் வந்தாலும் ஒண்ணா மண்ணா சேர்ந்தே பகிர்ந்துக்கிறாங்க... இன்னும் வேணும்..வேணும்னு தேவைகளின் பின்னால் ஓடிகிட்டிருக்க நாமதான்யா ஏழை...! 
என்ன பேசிட்டே இருக்கும் போது திடீர்னு மழை பெய்யுது...நடுவர் அவர்களே?”
அன்பு :  ம்...  நாந்தான் உன் முகத்துல தண்ணிய தெளிச்சேன்... தூக்கத்தில உளறிக்கிட்டே இருந்தேன்னு...”
 நான்:அப்ப நான் லியோனி பட்டிமன்றதுல பேசலையா...?”
அன்பு :“ இது வேறயா..? கஷ்டம்... ஸண்டேன்னு எழுப்பாம விட்டா மணி பாரு 10 ஆகுது..”
நான் : அச்சச்சோ நேத்து கவிதை எழுதிட்டு அப்படியே தூங்க போய்ட்டேன்னா அதான் அதே கான்செப்ட்டில கனவு வந்திருச்சி .. சரி சரி.. நான் குளிச்சிட்டு ரெடியாகிடறேன்... ஆடி சேல்ஸ் ஆரம்பிச்சிருச்சி ஷாப்பிங் போலாம்..
அன்பு: ஏற்கனவே பீரோவில் இருக்கிற துணியை  வச்சி சந்தோஷமா இரும்மா.... டா.. டா.. பை.. பை..!

ஊருக்கு உபதேசம் சொன்னா இப்படித்தான் மாட்டிக்க வேண்டியதாயிருக்கு... !