Showing posts with label மரம். Show all posts
Showing posts with label மரம். Show all posts

Monday, 15 July 2013

“ நன்றி மறப்பது நன்றன்று….! “

சுவாசிக்க  காற்று
நிலம் செழிக்க மழை
வெயிலுக்கு குடை
பசிக்கு காய் ருசிக்கு கனி
மணம் வீசும் மலர்
நலம் காக்கும் மருந்து
பறவைகளுக்கு கூடு
விலங்குக்கும் இரை..
இத்தனையும் தந்தும்
ஏன் வெட்டுகிறீர்..?

வெட்டினாலும் விறகாகும்..
வெட்டிய இடம் வீடாகும்..
நன்றி மறப்பதில்லை அக்றிணை
உயர் திணை நாம்தாம்  மறந்து விட்டோம்
மரம் அழிந்தால் நம் இனமும் அழியுமென்று..!

காற்றுக்கும், மழைக்கும்
 நாளை நாங்கள் எங்கே போவோம்..?
வீசாமல் போன காற்றுக்கு
ஏர் கண்டிஷனர் கிடக்கட்டும்..
காணமல் போகும் மழைக்கு..?
நாளைய தலைமுறை  எங்களை வாழ விடுங்கள்..
 நம்பிக்கை நீருற்றுகிறேன் …
மனிதனை நேசிக்கும் மரம் துளிர்க்க…!