Monday 25 February 2013

ஞாயிறு விடுமுறை மகிழ்ச்சியா? துன்பமா?- இது சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றம்..... இல்லை!
                    வீக் எண்ட் லீவ் நாளுக்காக ஒவ்வொரு நாளும் தவமாய் கிடப்போம். 
காலையில் தூக்கத்தை தியாகம் பண்ணி பரபரப்பான வேலைகளிலிருந்து 
கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்.  ஒவ்வொரு  நாளா வெய்ட் பண்ணி 
 ஞாயிறும் வந்தது. அப்பா..  டைம் என்னவாயிருக்கும்னு கூட பார்க்க 
கண்ணை திறக்க மனசு வரலை.  சே.. இது போல (சோம்பேறியா)  தினமும் 
இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்னு நினைச்சி பார்த்தேன். ம்ஹூம் 
தினமும் இப்படியே இருந்தா போரடிச்சிடும்.  வீட்டிலுள்ளவர்கள் சாப்பாட்டில் 
பெர்பெக்ட் மனிதர்கள்.  போனால் போகிறது என்று அரை மணி நேரம்.. 
பொறுமை காப்பார்கள். அதற்கு மேல்.. மணி 7ஆச்சி இன்னும் என்ன எழுந்திரு  
வாய்ஸ் அலாரம் வரும்.. மனசே இல்லாம எழுந்து வழக்கம் போல கிச்சன்ல  
சமையல்னு எதோ ஒண்ணை பண்ணி எல்லார் வாய்க்கும் தீனி போட்டு ஆப் 
பண்ணிட்டா அவங்கவங்க வேலைய பார்க்க ஆன் ஆயிடுவாங்க. அப்பா.. 
 இனிமே ரிலாக்ஸ்தான்.. சோம்பேறியா தூங்கலாம்.. இல்ல மொக்கையா 
டி.வி.பார்க்கலாம்னு நினைச்சா.  உடனே ஒரு டோன்.. ரிங் டோன்.. எனக்கு 
பிடிச்ச பாட்டுதான்.. ஆனாலும் இன்னிக்கு “ சே.. வேற வேலை இல்ல.. இந்த 
செல் போனை கண்டுபிடிக்காமலே இருந்திருக்கலாம்..”  ( கண்டுபுடிச்சது 
தப்பில்ல..  உன்ன ஆரு வாங்க சொன்னது  யூஸ் பண்ண சொன்னதுன்னு 
மனசுக்குள்ள ஒரு மனசு ஹி.. ஹின்னு கேட்டது) சரி யாருன்னுதான் 
பார்ப்போம்னு எடுத்தா.. பக்கத்தில இருக்கிற ஹவுஸ்வொய்ப் தோழி, “  இப்ப 
வீட்லதானே இருக்கே.. நான் வர்றேன்..” – என் பதிலை கூட எதிர்பார்க்காம 
டொக்குன்னு கட் . அடுத்த செகண்ட்டே  நான் காலிங், “ அம்மா தாயே 11 மணி 
ஆச்சு இன்னும்.. குளிக்கலை சாப்பிடலை நான் ப்ரீயாக இன்னும் நேரமாகும்.. 
இப்ப வந்த  டெரர் ஆயிடுவேன். .” “ சரி சரி நான் சாயங்காலமா வர்றேன்” 
மறுமுனையில்.. எவ்வளவு திட்டினாலும் தாங்கற அந்த நண்பி..!


அப்பா..  பிரெண்ட்டோட பிரண்டல்ல  இருந்து தப்பிச்சாச்சு. “  நாங்க வெளியே 
கிளம்பறோம் ஒரு ரெண்டு மணி நேரம் எங்க தொல்லையிலிருந்து தப்பிச்சி 
போ..ஆனா வந்து கண்டினியூ பண்ணுவோம்.. “ என்று  கணவரும், எங்க 
 குட்டீஸூம் கிளம்ப  அவர்களை அனுப்ப வெளியில் வந்து எட்டி பார்க்க எதிர் 
வீட்டு மாமி..போச்சுடா.. பேச ஆரம்பிச்சாங்கன்னா.. மெகா சீரியல் பூஜை 
போட்டு அதுவே முடிஞ்சிடும்… இவங்க அப்பதான் இடைவேளை விடுவாங்க 
.. வசமா மாட்டிக்கிட்டேன்.  கேபிள், சாட்டிலைட்  எதுவுமில்லாம நாலு தெரு 
நியூஸ் அவங்க மூலம் ஒலிபரப்பானது..  நல்லவேளையா இன்னொரு மாமி 
வந்து சேர நீங்க பேசிட்டிருங்க.. “  நான் வாஷிங் மெஷின் போடனும்னு.. 
நழுவினேன்.


ஒரு வழியா சாப்பாட்டு வேளையில் டிபனை முடிச்சிட்டு ஜம்னு தூக்கம். ஒரு 
அஞ்சு நிமிஷம்தான் ஆயிருக்கும்..  கிர்..ன்னு காலிங் பெல்.. சரி வெளிய 
போனவங்கதான்னு இருக்கும்னு நினைச்சு கதவை திறக்க..  ஒண்ணுவிட்ட 
ரெண்டு விட்ட தூரத்து சொந்தம் இரண்டு பேரா நிக்கிறாங்க..  
அலெக்ஸ்பாண்டியன்ல சந்தானம் சொன்ன காமெடி அந்த நேரத்துக்கு 
ஞாபகம் வந்தது..” டேய்… சொந்தக்காரங்க யாரும் வந்துட கூடாதுன்னுதான் 
 இவ்வளவு தூரம் ஊருக்கு ஒதுக்கு புரமா வீடு கட்டிகிட்டு வந்தேன்.. 
அப்பிடியும் கண்டுபிடிச்சி வந்துடறீங்களேடா.. எங்கதான் வரமாட்டிங்கன்னு 
சொல்லுங்க.. அங்க வீட்டை மாத்திக்கிறேன்….”   நான் இதை நினைச்சி சிரிக்க 
அவங்களும் எதையோ நினைச்சி சிரிக்க. எப்படியோ..  ஸ்நாக்ஸ், காபி 
முடிஞ்சி அவங்க கிளம்பினதும் இனிமே லீவு நாளானா வீட்ல இருக்கறதை 
விட ஒரு  மொக்கை படத்துக்கு போயி தியேட்டர்ல தூங்கிக்கலாம்னு முடிவு.
சரி போகட்டும் ..  மெயில் எதாச்சும் வந்திருக்கான்னு பார்க்க.. நண்பர் ஒருவர் 
அனுப்பியிருந்த சைனீஸ் பழமொழிகள் கண்ணில் பட்டது.. நல்லாத்தான் 
மொழிந்திருந்தாங்க.. ஆனா கடைசியில் நம்மாளுங்க டெக்னிக்க இதிலயும் 
யூஸ் பண்ணிட்டாங்களே… அடப்பாவிங்க.. வழக்கமா சாமி பேரை 
சொல்லித்தான இப்படி மிரட்டுவாங்க.. இப்ப பழமொழிக்குமா?  தபால் கார்டுல 
ஆரம்பிச்சி.. செல் போன், மெயில் வரை விடாத அந்த ஃபாலோ- அப் அடுத்து  
ராக்கெட் மூலமா விண்வெளிக்கும் அனுப்பிடுச்சிடுவாங்க போலிருக்கே...  
அந்த காலத்துல(?)  கார்டுல ஒரு மொட்ட கடுதாசி வரும்.….திருப்பதி 
பெருமாள் மகிமை சொல்லி இதை இப்படியே 13 பேருக்கு எழுதி அனுப்ப 
வேண்டும். பி.கு -  ஜெராக்ஸ் எடுக்க கூடாது.  அனுப்பினால் 
ஒருவாரத்திற்குள்  மகிழ்ச்சி கிடைக்கும்னு.. ஒரு  பாராவும்.. அனுப்பாவிட்டால் இப்படியெல்லாம் கஷ்டம் வந்துடும்னு ஒரு பாராவும் 
பயமுறுத்தும். ( எங்க அம்மா பயந்து போய் 13 கார்டு எழுதி யாருக்கும் கஷ்டம் 
கொடுத்து பயமுறுத்த கூடாதுன்னு சாமிகிட்டயே வச்சதை  சின்னப்ப 
பார்த்தது மறக்காம இருக்கு) அப்புறம் நம்ம  ட்ரண்டு.. செல் போன், மெயில்னு 
இதை ஒரு ஒன்பது பேருக்கு அனுப்பனும்னு சாமி பேரை சொல்லி அதே 
மிரட்டலும், இன்னிக்கு லக்கி டே இந்த மெசஜை எட்டு பேருக்கு அனுப்பினா 
அடுத்த ஒரு மணி நேரத்துல ஆச்சரியம் காத்திருக்குன்னும் வரும்.  மிஸ்டு 
கால் கொடுத்தே அக்கவுண்ட்ல அப்படியே வச்சிருக்க பேலன்ஸ் எல்லாம் 
ஒரு மணி நேரத்துல காலியாகி இருக்கும். “ஆச்சரியம் இதானான்னு .
.”வடிவேலு கணக்கா புலம்ப வேண்டியதுதான்.100 வருஷம் ஆனாலும் 
இதெல்லாம் கண்டினியூ ஆகும் போலிருக்கே...  சரி இந்த பழமொழி  பாருங்க…

CHINESE  PROVERB

ABOUT
MONEY


WITH MONEY YOU CAN
BUY A HOUSE
BUT NOT A HOME


WITH MONEY YOU CAN
BUY A CLOCK
BUT NOT TIME


WITH MONEY YOU CAN
  BUY A BED
BUT NOT SLEEP


WITH MONEY YOU CAN
BUY A BOOK, BUT
NOT KNOWLEDGE


WITH MONEY YOU CAN
  SEE A DOCTOR,
BUT NOT GOOD HEALTH


THIS CHINESE PROVERB
  BRINGS LUCK
IT ORIGINATED FROM
THE NETHERLANDS


THIS PROVERB HAS GONE 8
TIMES AROUND THE WORLD, NOW IT IS YOUR TURN TO HAVE GOOD LUCK ONCE YOU HAVE RECEIVED IT.


THIS IS NOT A JOKE


YOUR LUCK WILL COME BY MAIL OR INTERNET


SEND A COPY TO THE PERSONS THAT REALLY NEED LUCK, DO NOT SEND MONEY, BECAUSE YOU CANNOT BUY LUCK, AND DO NOT KEEP IT FOR MORE THAN 96HRS
 (4 DAYS)


HERE ARE A FEW EXAMPLES OF PEOPLE THAT GOT LUCK AFTER RECEIVING THE PROVERB

CONSTANTIN, GOT HIS FIRST IN 1953, HE ASKED HIS SECRETARY TO MAKE 20 COPIES.

NINE HOURS LATER HE WON 99MILLION IN THE LOTTERY IN HIS COUNTRY

CARLOS, EMPLOYED RECEIVED THE SAME CARD, BUT DID NOT SEND IT, A FEW DAYS LATTER HE LOST HIS EMPLOYMENT.

DAYS LATTER HE CHANGED HIS MIND, SENT IT, AND BECAME RICH.

IN 1967, BRUNO GOT THE CARD, HE LAUGHED ABOUT IT AND DISCARDED IT, A FEW DAYS LATTER HIS SON GOT SICK.

HE LOOKED FOR THE CARD MADE 20 COPIES AND SENT THEM. NINE DAYS LATTER, HE GOT GOOD NEWS: HIS SON WAS SAFE AND SOUND.


BEFORE 96 HOURS
YOU HAVE TO SEND THIS CARD.


IMPORTANT:
DO NOT MODIFY THE TEXT THAT I SENT YOU, COPY IT EXACTLY THE WAY YOU GOT IT.
GOOD LUCK.

                                  J.A.B
 
 
 
            


     என்னங்க இப்படி எல்லாம் பயமுறுத்துறாங்க ங்க....?!!!!!!!!!!!!!!!!!

இப்படி  எல்லாம் ஞாயிறு வர்றதை விட வராமலே இருக்கலாம்.. இதுக்கு 
ஆபிஸே பெட்டர். எந்த டிஸ்டர்பன்சும் இல்லாம தூங்கலாம். (ஸின்சியரா 
வொர்க் பண்றவங்கள்ளாம் கண்டனம் தெரிவிக்க வேணாம்… நாங்கள்லாம் 
நாலு நாள் வொர்க்கை நாலே மணி  நேரத்துல முடிச்சிட்டு  தூங்குவோம்…!)

Saturday 23 February 2013

விருந்து என்றால் உங்கள் நினைவுக்கு முதலில் வருவது?வெளிநாட்டில் ஒரு விருந்துக்கு அறிஞர் அண்ணா சென்றார்.

அந்த விருந்தை அளித்த பணக்காரரின் உணவு மேஜையில் பலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான் என வகைவகையாக இருந்தன.

"நான் தினம் ஒரு தட்டு வீதம் 30 நாளைக்கு 30 தட்டில் சாப்பிடுவேன்' என்றார் அந்தப் பணக்காரர்.

"எங்கள் நாட்டில் சிறு கிராமத்தில் இருக்கும் ஏழை கூட ஒரு வேளை சாப்பிட்ட தட்டில் மறுமுறை சாப்பிட மாட்டான்' என்றார் அண்ணா.

பணக்காரர் உட்பட அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமாக, "எப்படி?' என்று கேட்டனர்.

"அது வாழை இலை' என்றாராம்


வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும்.வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்ணும் போது  நறுமணத்துடன் விருந்தும் சுவைக்கும்..

வாழை இலை உண்டபின் எளிதாக எறிந்து விடலாம். சுற்றுப்புற சூழலுக்கும் தீமை இல்லை. ஆனால் இதற்கான செலவை விட பீங்கான், பிளாஸ்டிக் தட்டுகளை வாங்கி போட்டால் மிச்சமாகுமே என்று இப்போதெல்லாம் ஹோட்டல்களில் வாழை இலையை பார்க்க முடிவதில்லை. சரவண பவன் போன்ற சில ஹோட்டல்களில் மட்டும் வாழை இலை வைக்கிறார்கள். அதற்காகவே வெளியில் சென்றால் வாழை இலை பரிமாறும் ஹோட்டல்களுக்கு மட்டும் செல்வதுண்டு. 

என்னதான் சொல்லுங்க.. விருந்து என்று சொன்னாலே முதலில் வாழை இலைதான்..!

ஜூஸிலிருந்து கொதிக்கும் சாம்பார் வரை  பிளாஸ்டிக் பார்சல்தான். அதன் தீங்கை பற்றி ஒரு புறம் பேசி கொண்டிருந்தாலும் நடைமுறையில் தவிர்ப்பதில்லை. பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை,  உபயோகித்தால் அபராதம் என்று ஊர் ஊருக்கு அறிவிப்பு வந்தாலும்... அதுவும் பொது இடங்களில் புகைப்பிடித்தல், ஹெல்மெட் கட்டாயம் போன்று காற்றில் கரைந்து கொண்டுதான் இருக்கிறது.....  !

 மாற்றத்தை நம்மகிட்டயிருந்து ஆரம்பிக்கனும். பார்சல் வாங்க போகும் போது மறக்காம கேரியரை எடுத்துட்டு போங்க.


Friday 15 February 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.... ஹா.. ஹா..

  நான் பார்த்த நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் இதுதான்....


 nn

இவை என் மெயிலில் ஒரு நண்பர் அனுப்பியிருந்தது.
நன்றி- அதிரடிக்காரன் வலை!

Tuesday 12 February 2013

மனிதனின் மூன்று நிலைகள்...

தென்கச்சி சுவாமிநாதன்  சிரிக்கவும் வைப்பார்..சிந்திக்கவும் வைப்பார். நேரம் கிடைக்கும் போது அவர் சொன்ன கதைகளை படிப்பதுண்டு. சிந்திக்க வைச்ச ஒரு கதை...
 
கடும் மழை. ஒருவர் மருத்துவமனை செல்ல வேண்டும். எல்லா ஆட்டோவும் நிற்காமல்செல்கின்றன. ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் இதுதான் தருணம் என்று முப்பது ரூபாய் தூரத்துக்கு 200 ரூ கேட்கிறார்.

வேறு வழியின்றி அந்த மனிதர் ஆட்டோவில் ஏறி வேறு ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு பாட்டியைக் கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை செல்கிறார்.

 Receptionist பாட்டியின் பெயரைக் கேட்க' இவர்.....இது  என் பாட்டி இல்லை. தெருவில்மயங்கிக்கிடந்தார். உதவும் எண்ணத்தில் அழைத்து வந்தேன் " என்றார்.

ஆட்டோ டிரைவர் மனதினுள் "இவ்வளவு நல்ல மனிதரிடம் அநியாயமாகப் பணம் பேசிவிட்டோமே என்று வேதனை அடைகிறார். வைத்தியம் முடிந்ததும் டிரைவரே பாட்டியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி உரியஇடத்தில் இறக்கி விட்டுப் பணம் வாங்க மறுத்து விடுகிறார்.

மனிதனிடம் மூன்று நிலைகள் உள்ளன.

1.சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கவேண்டும் என்று அற்பமாக நினைத்தல்

2.தானும் மனிதனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுதல் இரண்டாவது நிலை.

3.பிறரைவிட சற்றேனும் கூடுதலாக நல்ல குணத்தை வெளிப் படுத்த நினைத்தால் மூன்றாம் நிலை.

ஆட்டோ டிரைவரிடம் இந்த மூன்று நிலைகளும் படிப்படியாகக் காணப்படுகின்றன.ஒரு தெளிவான மனமாற்றம் ஏற்படுகிறது.

எல்லா மனிதரிலும் இப்படிப்பட்ட ஈர உள்ளம் இருக்கவே செய்கிறது.ஆனால் மனதின் அடிஆழத்தில்  உள்ளது.Saturday 9 February 2013

காதல் கணவன்....!


அதென்னது...
விரல் நீட்டிய திசையில்
திரும்பியதும்..
எதிர்பாராமல்
பதித்து விட்ட
அந்த முதல் அடையாளம்
இன்னும் ஈர நினைவுகளுடன்...

அதனாலோ என்னவோ
எதோ ஒரு காரணத்தில்
தொடங்கும்
 நம் சண்டையை
முடித்து வைப்பதும்
உன் முத்தமாகயிருக்கிறது..!

Tuesday 5 February 2013

திருமண அரங்கில்....!
வாழ்த்த வந்தவர்கள்
விடைபெற்றதும்..
 இருக்கைகளில் கசங்கி
பாதங்களில் நசுங்கி
வாசிக்க படாமல்
இறைந்து கிடந்தது
வாழ்த்துப்பா..!
அப்புறப்படுத்த வந்த
துப்புறவு காரி
முணு முணுப்பு
எம்மாம் குப்பை பாரு..?!

மொய் கவர் மட்டும்
பலமாய் யோசித்தது
தன்னை மட்டும்
சேகரித்த
காரணம் புரியாமல்..!

Friday 1 February 2013

காற்று வாங்க போய் கவிதை வாங்கி வரலாம்.. ஆனால்..?

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன். இது இன்பம்தான். ஆனால் தலைவலின்னு போய் வயிறு வலியை வாங்கிட்டு வந்தா...?!


என் தோழி ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருந்தார்.. அவர் குழந்தைக்கு சளி, இருமல் என்று உள்ளூரில் உள்ள குழந்தைகள் மருத்துவரிடம் சென்று மருந்துகள் வாங்கி வந்து உபயோகித்திருக்கிறார்.   ஊர் திரும்பியதும் அவர் அந்த மாத்திரைகள் பற்றி இணையத்தில் தேடியுள்ளார். அவை தடை செய்யப்பட்ட மாத்திரை என்று தெரிந்தது. அதனால் உண்டாகும் பக்க விளைவுகளை பற்றியும் அறிந்திருக்கிறார். அவர் வேதியியல் படித்தவர் என்பதால் மருந்து பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவதில் எச்சரிக்கை ஆகிவிட்டார்.  
ஆனால் எத்தனை பேர் மருந்து கம்பெனிகள் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்? ஒரு வாஷிங் மெஷின் வாங்கவோ.. ஏ.ஸி வாங்கவோ அதன் தரத்தை, விலையை கடை கடையாய் ஏறி விசாரிக்கிறோம். எந்த கம்பெனி தயாரிப்புகள் சிறந்தது என்று பல பேரை விசாரித்து நம்மால் வாங்க முடிகிறது. ஆனால் மருந்து பொருட்களின் தரம் பற்றி நம்மால் தீர்மானிக்க முடிகிறதா? மருத்துவர் தீர்மானிப்பதைதான் நான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதாயிருக்கிறது.
ஒவ்வொரு மருந்து கம்பெனியிலிருந்தும் தன் விற்பனை பிரதிநிதி மூலம் மாதாத்தில் இரு முறை மருத்துவரை சந்தித்து மருந்துகளை அறிமுகப்படுத்தி, இலவசமாக சில மருந்து பொருட்களையும், பரிசுகளையும் தந்து விட்டு செல்கின்றனர். விற்பனை யுத்தியிலும் லாப நோக்கத்துடனும் மருந்து கம்பெனிகள் மருத்துவரை கவர்ந்து அதன் தயாரிப்புகளை பயன் படுத்த வைத்து விடுகிறது. இலாப நோக்கில்  தடை செய்யப்பட்ட மருந்துகளும், பக்க விளைவுகள் ஏற்படுத்தும் வீரியமிக்க மாத்திரைகளும் மருந்து சந்தையில் நுழைந்து விடுகிறது.
மருத்துவ மனைகள் அதிகமாக பெருகிவிட்டதால் கடும் போட்டி வேறு. இந்த மருத்துவமனைக்கு சென்றால் நிவாரணம் கிடைத்து விடும் என்று நம்பிக்கையை மக்களிடம் விதைக்க வேண்டும். உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த மருத்துவமனைக்கு சென்று விடுவார்கள் என்று வீரியமிக்க மருந்து, ஊசிகளை பயன்படுத்துகின்றனர். இப்போதெல்லாம் தலைவலிக்கு மாத்திரை வாங்கினால் கூடவே வயிற்று வலிக்கும் மாத்திரை எழுதி கொடுப்பதை அறிந்திருப்பீர்கள். எந்த உபாதைக்காக சென்றாலும் கூடவே ‘ ரானிட்டின் ‘ என்ற வயிறு எரிச்சலை தணிக்கும் மாத்திரையை மருத்துவர்கள் கட்டாயம் தருகின்றனர்.
உடல் பிரச்சினைகளுக்கு இந்த இந்த மருந்துகளை
உபயோகிக்கலாமா, அதனால் எதேனும் பக்கவிளைவுகள்
உண்டா  என்பதை மருந்து கம்பெனிகள் வெளியிடும்
விளம்பரத்தைதான் நாம் நம்ப முடிகிறது.  அதில் வியாபார
நோக்கம் இல்லாமல் உண்மை தன்மை இருக்கிறதா என்ற
விழிப்புணர்வு நம் மருத்துவர்கள் அறிய முடிவதில்லை.
உணவு பொருட்களில் சாம்பார் பொடி என்று எடுத்து கொண்டால் பல கம்பெனி தயாரிப்புகள் இருக்கும் . ஆனால் மூலப்பொருட்கள் எல்லாம் ஒன்றுதான். ஒரே வேதிப் பொருட்களை கொண்டு ஒவ்வொரு மருந்து கம்பெனியும் தன் பொருட்களுக்கு வெவ்வேறு வர்த்தக பெயரை சூட்டி கொள்கிறது. அதில்  மூலப்பொருட்கள் கண்ணுக்கே தெரியாத வகையில் பொடி எழுத்துகளில்தான் குறிப்பிட்டிருப்பார்கள் என்பதால் நமக்கு என்ன மருந்து என்பதை விட மருந்தின் வர்த்தக பெயர்தான் தெரியும்.
நம் நாட்டை பொறுத்த வரை மருந்து கம்பெனிகள் பற்றி
தேசிய விழிப்புணர்வு வரவேண்டும். இதற்கு அரசாங்கமே
மருந்து கம்பெனிகள் பயன் படுத்தும் முறைகள்,
பக்கவிளைவுகள் ஏற்படுத்துமா என்ற விவரத்தையும் புதிதாக
சந்தைக்கு வரும் மருந்து தன்மைகள் பற்றியும் ஆராய்ந்து 
 மருத்துவ மனைகளுக்கு தகவல் புத்தகம் மாதாமாதம் அனுப்ப
வேண்டும். இதில் எந்த மருந்து கம்பெனிகளின் விளம்பரமும்
அனுமதிக்க கூடாது.

தடை செய்யப்பட்ட மருந்துகளை ஏன் அரசாங்கம்
அனுமதிக்கிறது? மருந்தின் பின் விளைவுகளில் இருந்து
பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது பற்றி
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்….