Showing posts with label இப்படித்தான் சமாளித்தேன். Show all posts
Showing posts with label இப்படித்தான் சமாளித்தேன். Show all posts

Sunday, 17 June 2012

இப்படித்தான் சமாளித்தேன்


இப்படித்தான் சமாளித்தேன்


என் மகள் அஸ்வினிக்கு நடிகை ஜோதிகாவை ரொம்ப பிடிக்கும்.
அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒரு
நாள் திடீரென்று , "ஜோதிகா ஆண்ட்டி நம்ம வீட்டுக்கு வந்தாதான்
சாப்பிடுவேன் " .. என்று அடம் பிடித்தாள். எத்தனையோ விளையாட்டுக்
காட்டினாலும் சாப்பிடாமல் அழ ஆரம்பித்து விட்டாள். என்ன
செய்வதென்று யோசித்த நான் , " ஜோதிகா ஆண்ட்டிக்கு நிறைய
வேலை இருக்காம்.. உன் கூட போன்ல வேணும்னா பேசறாங்களாம்..."
என்று அவளிடம் சொல்லிவிட்டு, வெளியூரில் இருக்கும் தோழி
ஒருவருக்கு ஃபோன் செய்து என் குழந்தையிடம் ஜோதிகா மாதிரி பேச
சொன்னேன். தோழியும் குழந்தையிடம், " சமர்த்தா சாப்பிடு, நான்
லீவ்ல வர்றேன்..." என்று சமாதனப்படுத்த, ஜோதிகாதான் பேசினார்
என்று நம்பிய என் மகள் மகிழ்ச்சியாக சாப்பிட்டாள்.இப்போது அவள்
எட்டாம் வகுப்பு படிக்கிறாள். ஜோதிகாவுடன் போனில் பேசிய
கதையை அவளிடம் இப்போது சொன்னால் , வெட்கத்துடன் சிரிக்கிறாள்.

(ஜனவரி 1-15, 2012 தேவதை இதழில் வெளிவந்தது)