வீக் எண்ட் லீவ்
நாளுக்காக ஒவ்வொரு நாளும் தவமாய் கிடப்போம்.
காலையில் தூக்கத்தை தியாகம் பண்ணி பரபரப்பான
வேலைகளிலிருந்து
கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்.
ஒவ்வொரு நாளா வெய்ட் பண்ணி
ஞாயிறும்
வந்தது. அப்பா.. டைம் என்னவாயிருக்கும்னு கூட
பார்க்க
கண்ணை திறக்க மனசு வரலை. சே.. இது
போல (சோம்பேறியா) தினமும்
இருந்தா எவ்வளவு
நல்லாயிருக்கும்னு நினைச்சி பார்த்தேன். ம்ஹூம்
தினமும் இப்படியே இருந்தா போரடிச்சிடும். வீட்டிலுள்ளவர்கள் சாப்பாட்டில்
பெர்பெக்ட் மனிதர்கள். போனால் போகிறது என்று அரை மணி நேரம்..
பொறுமை காப்பார்கள்.
அதற்கு மேல்.. மணி 7ஆச்சி இன்னும் என்ன எழுந்திரு
வாய்ஸ் அலாரம் வரும்.. மனசே இல்லாம எழுந்து வழக்கம் போல கிச்சன்ல
சமையல்னு எதோ ஒண்ணை பண்ணி எல்லார் வாய்க்கும் தீனி
போட்டு ஆப்
பண்ணிட்டா அவங்கவங்க வேலைய பார்க்க ஆன் ஆயிடுவாங்க. அப்பா..
இனிமே ரிலாக்ஸ்தான்..
சோம்பேறியா தூங்கலாம்.. இல்ல மொக்கையா
டி.வி.பார்க்கலாம்னு நினைச்சா. உடனே ஒரு டோன்.. ரிங் டோன்.. எனக்கு
பிடிச்ச பாட்டுதான்..
ஆனாலும் இன்னிக்கு “ சே.. வேற வேலை இல்ல.. இந்த
செல் போனை கண்டுபிடிக்காமலே இருந்திருக்கலாம்..” ( கண்டுபுடிச்சது
தப்பில்ல.. உன்ன ஆரு வாங்க சொன்னது யூஸ் பண்ண சொன்னதுன்னு
மனசுக்குள்ள ஒரு மனசு ஹி..
ஹின்னு கேட்டது) சரி யாருன்னுதான்
பார்ப்போம்னு எடுத்தா.. பக்கத்தில இருக்கிற ஹவுஸ்வொய்ப்
தோழி, “ இப்ப
வீட்லதானே இருக்கே.. நான் வர்றேன்..”
– என் பதிலை கூட எதிர்பார்க்காம
டொக்குன்னு கட் . அடுத்த செகண்ட்டே நான் காலிங், “ அம்மா தாயே 11 மணி
ஆச்சு இன்னும்..
குளிக்கலை சாப்பிடலை நான் ப்ரீயாக இன்னும் நேரமாகும்..
இப்ப வந்த டெரர் ஆயிடுவேன். .” “ சரி சரி நான் சாயங்காலமா
வர்றேன்”
மறுமுனையில்.. எவ்வளவு திட்டினாலும் தாங்கற அந்த நண்பி..!
அப்பா.. பிரெண்ட்டோட பிரண்டல்ல இருந்து தப்பிச்சாச்சு. “ நாங்க வெளியே
கிளம்பறோம் ஒரு ரெண்டு மணி நேரம் எங்க
தொல்லையிலிருந்து தப்பிச்சி
போ..ஆனா வந்து கண்டினியூ பண்ணுவோம்.. “ என்று கணவரும், எங்க
குட்டீஸூம் கிளம்ப அவர்களை அனுப்ப வெளியில் வந்து எட்டி பார்க்க எதிர்
வீட்டு மாமி..போச்சுடா.. பேச ஆரம்பிச்சாங்கன்னா.. மெகா சீரியல் பூஜை
போட்டு அதுவே முடிஞ்சிடும்…
இவங்க அப்பதான் இடைவேளை விடுவாங்க
.. வசமா மாட்டிக்கிட்டேன். கேபிள், சாட்டிலைட் எதுவுமில்லாம நாலு தெரு
நியூஸ் அவங்க மூலம் ஒலிபரப்பானது..
நல்லவேளையா இன்னொரு மாமி
வந்து சேர நீங்க பேசிட்டிருங்க..
“ நான் வாஷிங் மெஷின் போடனும்னு..
நழுவினேன்.
ஒரு வழியா சாப்பாட்டு
வேளையில் டிபனை முடிச்சிட்டு ஜம்னு தூக்கம். ஒரு
அஞ்சு நிமிஷம்தான் ஆயிருக்கும்.. கிர்..ன்னு காலிங் பெல்.. சரி வெளிய
போனவங்கதான்னு
இருக்கும்னு நினைச்சு கதவை திறக்க.. ஒண்ணுவிட்ட
ரெண்டு விட்ட தூரத்து சொந்தம் இரண்டு பேரா நிக்கிறாங்க..
அலெக்ஸ்பாண்டியன்ல சந்தானம் சொன்ன காமெடி அந்த நேரத்துக்கு
ஞாபகம் வந்தது..” டேய்… சொந்தக்காரங்க யாரும் வந்துட கூடாதுன்னுதான்
இவ்வளவு தூரம்
ஊருக்கு ஒதுக்கு புரமா வீடு கட்டிகிட்டு வந்தேன்..
அப்பிடியும் கண்டுபிடிச்சி வந்துடறீங்களேடா..
எங்கதான் வரமாட்டிங்கன்னு
சொல்லுங்க.. அங்க வீட்டை மாத்திக்கிறேன்….” நான் இதை நினைச்சி சிரிக்க
அவங்களும் எதையோ நினைச்சி
சிரிக்க. எப்படியோ.. ஸ்நாக்ஸ், காபி
முடிஞ்சி
அவங்க கிளம்பினதும் இனிமே லீவு நாளானா வீட்ல இருக்கறதை
விட ஒரு மொக்கை படத்துக்கு போயி தியேட்டர்ல தூங்கிக்கலாம்னு
முடிவு.
சரி போகட்டும்
.. மெயில் எதாச்சும் வந்திருக்கான்னு பார்க்க..
நண்பர் ஒருவர்
அனுப்பியிருந்த சைனீஸ் பழமொழிகள் கண்ணில் பட்டது.. நல்லாத்தான்
மொழிந்திருந்தாங்க..
ஆனா கடைசியில் நம்மாளுங்க டெக்னிக்க இதிலயும்
யூஸ் பண்ணிட்டாங்களே… அடப்பாவிங்க.. வழக்கமா
சாமி பேரை
சொல்லித்தான இப்படி மிரட்டுவாங்க.. இப்ப பழமொழிக்குமா? தபால் கார்டுல
ஆரம்பிச்சி.. செல் போன், மெயில் வரை
விடாத அந்த ஃபாலோ- அப் அடுத்து
ராக்கெட் மூலமா
விண்வெளிக்கும் அனுப்பிடுச்சிடுவாங்க போலிருக்கே...
அந்த காலத்துல(?) கார்டுல ஒரு மொட்ட கடுதாசி வரும்.….திருப்பதி
பெருமாள்
மகிமை சொல்லி இதை இப்படியே 13 பேருக்கு எழுதி அனுப்ப
வேண்டும். பி.கு - ஜெராக்ஸ் எடுக்க கூடாது. அனுப்பினால்
ஒருவாரத்திற்குள் மகிழ்ச்சி கிடைக்கும்னு.. ஒரு பாராவும்.. அனுப்பாவிட்டால் இப்படியெல்லாம் கஷ்டம்
வந்துடும்னு ஒரு பாராவும்
பயமுறுத்தும். ( எங்க அம்மா பயந்து போய் 13 கார்டு எழுதி
யாருக்கும் கஷ்டம்
கொடுத்து பயமுறுத்த கூடாதுன்னு சாமிகிட்டயே வச்சதை சின்னப்ப
பார்த்தது மறக்காம இருக்கு) அப்புறம் நம்ம
ட்ரண்டு.. செல் போன், மெயில்னு
இதை ஒரு ஒன்பது
பேருக்கு அனுப்பனும்னு சாமி பேரை சொல்லி அதே
மிரட்டலும், இன்னிக்கு லக்கி டே இந்த மெசஜை
எட்டு பேருக்கு அனுப்பினா
அடுத்த ஒரு மணி நேரத்துல ஆச்சரியம் காத்திருக்குன்னும் வரும். மிஸ்டு
கால் கொடுத்தே அக்கவுண்ட்ல அப்படியே வச்சிருக்க
பேலன்ஸ் எல்லாம்
ஒரு மணி நேரத்துல காலியாகி இருக்கும். “ஆச்சரியம் இதானான்னு .
.”வடிவேலு
கணக்கா புலம்ப வேண்டியதுதான்.100 வருஷம் ஆனாலும்
இதெல்லாம் கண்டினியூ ஆகும் போலிருக்கே...
சரி இந்த பழமொழி பாருங்க…
CHINESE PROVERB
ABOUT
MONEY
WITH
MONEY YOU CAN
BUY A HOUSE
BUT NOT A HOME
WITH
MONEY YOU CAN
BUY A CLOCK
BUT NOT TIME
WITH
MONEY YOU CAN
BUY A BED
BUT NOT SLEEP
WITH
MONEY YOU CAN
BUY A BOOK, BUT
NOT KNOWLEDGE
WITH
MONEY YOU CAN
SEE A DOCTOR,
BUT NOT GOOD HEALTH
THIS
CHINESE PROVERB
BRINGS LUCK
IT ORIGINATED FROM
THE NETHERLANDS
THIS
PROVERB HAS GONE 8
TIMES AROUND THE WORLD, NOW IT IS YOUR TURN TO HAVE GOOD LUCK ONCE YOU HAVE
RECEIVED IT.
THIS
IS NOT A JOKE
YOUR LUCK WILL COME BY MAIL OR INTERNET
SEND
A COPY TO THE PERSONS THAT REALLY NEED LUCK, DO NOT SEND MONEY, BECAUSE YOU
CANNOT BUY LUCK, AND DO NOT KEEP IT FOR MORE THAN 96HRS
(4 DAYS)
HERE
ARE A FEW EXAMPLES OF PEOPLE THAT GOT LUCK AFTER RECEIVING THE PROVERB
CONSTANTIN,
GOT HIS FIRST IN 1953, HE ASKED HIS SECRETARY TO MAKE 20
COPIES.
NINE HOURS LATER HE WON 99MILLION IN THE LOTTERY IN HIS COUNTRY
CARLOS,
EMPLOYED RECEIVED THE SAME CARD, BUT DID NOT SEND IT, A FEW DAYS LATTER HE LOST
HIS EMPLOYMENT.
DAYS LATTER HE CHANGED HIS MIND, SENT IT, AND BECAME RICH.
IN
1967, BRUNO GOT THE CARD, HE LAUGHED ABOUT IT AND DISCARDED IT, A FEW DAYS
LATTER HIS SON GOT SICK.
HE LOOKED FOR THE CARD MADE 20 COPIES AND SENT THEM. NINE DAYS LATTER, HE GOT
GOOD NEWS: HIS SON WAS SAFE AND SOUND.
BEFORE
96 HOURS
YOU HAVE TO SEND THIS CARD.
IMPORTANT:
DO
NOT MODIFY THE TEXT THAT I SENT YOU, COPY IT EXACTLY THE WAY YOU GOT IT.
GOOD
LUCK.
J.A.B
என்னங்க இப்படி எல்லாம் பயமுறுத்துறாங்க ங்க....?!!!!!!!!!!!!!!!!!
இப்படி எல்லாம் ஞாயிறு வர்றதை விட வராமலே இருக்கலாம்.. இதுக்கு
ஆபிஸே பெட்டர். எந்த டிஸ்டர்பன்சும் இல்லாம தூங்கலாம். (ஸின்சியரா
வொர்க் பண்றவங்கள்ளாம்
கண்டனம் தெரிவிக்க வேணாம்… நாங்கள்லாம்
நாலு நாள் வொர்க்கை நாலே மணி நேரத்துல முடிச்சிட்டு தூங்குவோம்ல…!)