Sunday, 15 April 2012

கவிதை
" மெல்ல திறந்தது..  "
எந்திர கதியில்
எதோ ஒரு வேலை ...
மனசு-
மௌன மேடை
கட்டிக்கொள்ள ..
செவி மட்டும் ..
வீதியில் விசாரணை ..
' கீர.. சிரிக்கீர...'
கூடைக்காரியின்
எதுகை.. மோனை ..
ஏற்ற .. இறக்கங்கள் ..
' மாமியார்.. மருமகள் ..
குற்றபத்திரிக்கை
வாசித்து
வழியில் விழுந்த வார்த்தைகள்..
' கார சாரமாய் '
அரசியல் பேசி
நடந்த-
கர கரத்த குரல்கள்..
... எதுவும்
திசை திருப்பவில்லை..
' பப்பா.. தத்தா...'
தத்தி நடந்த-
குழந்தையின்
மொழி கேட்கும்வரை..
ஜன்னல் வழியே..
எட்டி பார்த்த கண்கள்
உணர்ந்தது..
' குழலினிது.. யாழினிது ..
என்பர்..
மழலை சொல் கேளாதோர்..
என்ற
வரிகளின் நிரூபனத்தை   ...!