நேற்று விடியற்காலை மூன்று மணிக்கு மேல்இருக்கும். கொசுக்கள்
ஹம்மிங் பாடி எழுப்பியது.. பார்த்தால் ஒரே இருட்டு..லைட், ஃபேன் எல்லாம் ஆப் ஆகியிருந்தது. என்னடா இது ..நாமதான் இன்வெர்ட்டர் புண்ணியத்தில் காலத்தை ஓட்டிட்டிருக்கமே.. அதுக்கும் என்ன ஆப்பு என்று எழுந்து வெளியில் பார்த்தேன். விசாரித்ததில் தெரிந்தது.. நேற்று இரவு முழுசுமே கரண்ட் இல்லையாம். இன்வெர்ட்டரும்தான் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும்? அட கொடுமையே.. எதுக்கு தொடர்ந்து பல மணி நேரமா பவர் கட்டுன்னு கேட்டால் டிரான்ஸ்பார்மர் சரி செய்யறாங்களாம். கரண்ட்டே இல்லாத டிரான்ஸ்பார்மருக்கு பழுது பார்க்க என்ன வேண்டி கிடக்கு?
இரவு முழுக்க இருட்டில ஃபேன் காற்று கூட கிடைக்காம தூக்கமில்லாம எத்தனை பேரு அவஸ்தை படறாங்க. குறைஞ்சது ஒரே ஒரு நாள் இந்த அவஸ்தையை பதவியில இருக்கிறவங்க அனுபவிச்சு பார்த்தா தெரியும்.. எளிய மக்களோட பிரச்சினை. பல பகுதிகளில் நேரம் காலமே அறிவிப்பதில்லை எப்ப வரும் போகும்னே சொல்ல முடியாது.
காலையில் வாட்டர் டேங்க் காலியா இருக்கும் போது கரண்ட்டும் காலியா இருக்கும். தண்ணீ இல்லாம காலையிலே எந்த வேலையும் முடியாது.
வீட்டு வேலைகளுக்கு மட்டும் தடையா இல்ல.. அதோட அலுவலகம் முடிஞ்சி வீட்டுக்கு திரும்பற லேடிஸ் இருட்டுல பாதுகாப்பா போக முடியுமா? நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் நகை பறிக்கும் திருடங்களுக்கு கரண்ட் கட் வசதியா இல்ல இருக்கு..?
எத்தனையோ ஏழை மாணவர்கள் தங்கள் எதிர்காலம் ஓளிமயமாக பாடு பட்டு படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் எரியும் ஒற்றை(நம்பிக்கையாய்) விளக்கும் கூட அணைவது வேதனையாக இருக்கிறது.
கரண்ட்டோ அல்லது இன்வெர்ட்டரோ இருந்தா படிச்சு பாருங்க. இதெல்லாம் நமக்கு பழகிப் போன சமாச்சாரம்தானுங்க..!