Monday, 6 May 2013

உங்க டைம் எப்படி...?



கூட்டி வைத்தாலும்
குறைத்து வைத்தாலும்
 அடங்காத
 ஓட்டமாய் காலம்..
சரியாகத்தானிருக்கும்
பத்து நிமிட தாமதத்திலும்
சமாதானமாய் ஒரு புறப்பாடு..
பரிகாசமாய் பார்த்தது -
பத்து நிமிடம் வேகம்
கூட்டிய என் வீட்டு கடிகாரம்..!

 

Friday, 26 April 2013

காதல்ல இப்படித்தான் உளருவாங்க....!

ஒரு நொடியில்
அசைவமாகிவிட்டேன்
உன் கண் மீனை
விழுங்கி…!
**********
பூக்கள்
மலர்வதை பார்க்க ஆசை..
உன் இதழ்களை பார்த்து கொண்டிருக்கிறேன்..!
*****


            
திருமணத்திற்கு பின்…




1.   கோட்டான் மாதிரி முழியை பாரு..

2.    வாயை மூடவே மாட்டேங்கிறா ராட்சஸி..

(பி.குறிப்பு- கவிதைன்னா கூட சிரிச்சிட்டே படிக்கனும் ஆமா...) 

 

Wednesday, 24 April 2013

யாருக்கும் தெரியாமல்...!

பத்திரமாய்த்தான்
     ஒளித்து வைத்திருக்கிறேன்
     உன் நினைவுகளை..
    மயில் இறகை வைத்து
குட்டி போடுமென்று
     மூடி வைத்த
புத்தகத்தை போல்..!