Wednesday 3 July 2013

சிறுகதை எழுத விருப்பமா?



டிவி ஆர் நினைவு சிறுகதை போட்டி

தினமலர் நிறுவனர் டிவி ஆர் நினைவு சிறுகதை போட்டியை தினமலர்-வாரமலர் வருடந்தோறும் நடத்துகிறது. சுவாரஸ்யமான நடையில் கதை எழுத தெரிந்தவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே கதை எழுதி வருபவர்கள் வரவேற்கப்பட்டாலும் புதிய எழுத்தாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது . நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்தி வருகிறது இப்போட்டி.
முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுங்கள்!

முதல் பரிசு = ரூ.10,000/-

இரண்டாம் பரிசு = ரூ.5,000/-

மூன்றாம் பரிசு = ரூ.3,000/-

இது தவிர 10 சிறுகதைகளுக்கு ஆறுதல் பரிசு - ரூ1,000/-
( நானும் இரண்டு முறை ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி!)

கதைகள் எட்டு பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தாளின் ஒரு புறம் மட்டுமே கதை எழுத வேண்டும். பின் புறத்தில் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணை எழுத வேண்டும்.

போட்டிக்கான சிறுகதைகள் அனுப்ப கடைசி தேதி ஜூலை -27

முகவரி:   டிவி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி
தினமலர்- வாரமலர்,
தபால் பெட்டி எண்- 7225,
சென்னை-600 006.

முயற்சி வெற்றியை தரும்... எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் தயங்காம கலந்துக்கங்க...!

*******************************************************

பி.கு-  இந்த அறிவிப்பு வேலூர், திருச்சி பதிப்புகளுக்கு மட்டும் பொருந்தும். மற்ற ஊர் பதிப்புகளுக்கு  தேதி வெவ்வேறு இருக்கும். வேலூர், திருச்சி, ஈரோடு, கும்பகோணம் பகுதியில் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.