Tuesday 23 July 2013

சொல்லுகிறேன்.....




(.மு)
 நானும் இன்னொரு தோழியும் வேற ஒருத்தர் .சி போன்லருந்து ரகளையை ஆரம்பிச்சிடுவோம். எங்க ரகளை எல்லாம் சும்மா ஹா.. ஹா.. டைப்தான்..! அதனால யாரும் சண்டைக்கெல்லாம் வரலை...


ஒரு நாள் அடுத்த ஊரிலிருக்கும் ஸ்வீட் கடை  நெம்பருக்கு போன் போட்டு,

ஏனுங்க... மேல்பட்டியிலிருந்து பேசுறோம்ங்க.... விருந்துக்கு ஸ்வீட், காரம் ஆர்டர் பண்றோம்... ஒரு நானுறு ஜாங்கிரி,  15 கிலோ மிச்சர் போட்டு வைங்க... நாங்க நாளைக்கா வந்து வாங்கிக்கிறோம்...” 

 அவ்வளவுதான்  எதிர் முனையில பேசறதுக்குள்ள படக்குன்னு வச்சிடுவோம். பேசும் போது அசல் கிராமத்தாள் போல சீரியஸா பேசிட்டு போனை வச்சவுடன் விழுந்து விழுந்து சிரிப்போம்.

ஏம்ப்பா நிஜமாவே அவங்க போட்டுடுவாங்களா...?” தோழி சந்தேகமா கேப்பா,

 அநியாயத்துக்கு... அப்பாவியா கேள்வி? அட்வான்ஸ், அட்ரஸ் எல்லாம் வாங்காம போட்டு வைக்கிறதுக்கு அவிங்க என்ன காதுல ஜாங்கிரியா சுத்திகிட்டு உட்கார்ந்திருப்பாங்க.... ஹா... ஹா...”

அப்புறம் எங்க தெருவிலயே இருக்கிற அம்மாஞ்சி மாமிக்கு  
போட்டோம்.

நான், “ ஹலோ நான்க ஸன் மியுஸிக்லிருந்து  பேசறோம் உங்களுக்கு  புடிச்ச ஒரு பாட்ட சொல்லுங்க.... போடறோம்...”

மாமி  நிஜம்னு  நினைச்சி திக்கி திக்கி...”தில்லானா... தில்லானா ரஜினி பாட்டு போடுங்க...”

 ஷ்யூரா போடுவோம் பாருங்க...”

  நான் பேசினது எப்ப வரும்...?

மறக்காம பிப்ரவரி 30 ம் தேதி 13 மணிக்கு பாருங்க...”
டொக்.

இப்படியே அப்பப்ப ஐடியாவா பண்ணி கலாய்ச்சிட்டிருப்போம். கடைசியில் கூட இருந்த என் தோழி எனக்கே அல்வா கொடுத்து அது வீட்ல பிரச்சினையாகிற அளவுக்கு வம்பாயிடுச்சி...

எனக்கு மேரேஜ் நிச்சயமாயிருந்த நேரம்... எங்க வீட்டு லேண்ட் லைனுக்கு ஒரு போன், 

எங்க அக்கா எடுத்துருச்சி,

ஹலோ உஷா ஆன்ட்டியா... அங்கிள் ஓரே ஒருதரம் உங்க கூட பேசனும்கிறார் பேசறிங்களா....”  சின்ன மழலையின் குரல்.

என் அக்காவோ எதோ ஒரு பாப்பா, அங்கிள் அது இதுன்னுதேன்னு கலவரமாயிடுச்சி..  யாரு என்ன என்று... குரலை உயர்த்தவும் மறுமுனை கட் ஆகிவிட்டது.

உடனே அம்மாகிட்ட சொல்லி கண்ணை கசக்குது.. இதென்ன எவனோ இவகிட்ட பேசனும்னு ஒரு பாப்பா சொல்லுது ... என்ன ஏதுன்னு என்னை பயந்துகிட்டே கேட்கிறாங்க.

மா ஏதாவது ராங் நம்பரா இருக்கும்....”

இல்ல உன் பேரை சொல்லுச்சு அந்த பாப்பா...

எனக்கு டக்குன்னு என் தோழி ஞாபகம்தான் வந்தது.( எங்க வீட்ல நாங்க ரெண்டு பேரும் பண்ற ரகளை எல்லாம் தெரியாது. பெரியவங்க எதிர ரொம்ப சைலண்ட்டா இருப்போம்) உடனே அவளுக்கு போனை போட்டேன், “ ஏய் குழந்தைய விட்டு பேச வச்சது நீதானே?”

ஹா..ஹா.. எப்படி கண்டுபிடிச்சே?”

எருமை.. அறிவிருக்கா?  போனை எடுத்தது எங்க அக்கா... வீட்ல என்னமோ எதோன்னு பயந்து போய் கிடக்காங்க... ஒனக்கு வேற கான்செப்ட்டா கிடைக்கல? அங்கிள் அது இதுன்னுகிட்டு... அதுவும் இந்த மாதிரி நேரத்துல மரியாதையா எங்க வீட்ல வந்து சொல்லி ஸாரி கேளு...”

அப்புறம் அவ எங்க வீட்ல வந்து சும்மா வெளையாட்டுக்கு அவ அக்கா குழந்தைய பேச விட்டதை சொல்லி ஸாரி சொன்னா. அப்புறம்தான் எங்க வீட்ல நிம்மதியாச்சுதுங்க.

சில சமயம் விளையாட்டு கூட வினையாயிடும்னு அன்னிக்கு ஒரு பாடம் !

(.பி)

போன் பேசி கலாய்ச்சது ஒரு பக்கம் போய் போன் எடுக்கறதுக்கே கலாய்ச்சேன்னா பார்த்துக்கங்க......

கல்யாணமாகி மாமியார் வீட்டுக்கு வந்ததும், எங்கம்மா வீட்டு ஞாபகம் வந்து அடிக்கடி கண்ணை கசக்கும். எங்க வீட்ல விஷயமிருந்தா போன் பண்ணுவாங்க. எனக்கோ எப்ப நினைக்கிறோனோ அப்ப பேசனும். போன் பில்லு மட்டும் பொதுவில போயிரனும். மாமியார் வேற ரொம்ப ரொம்ப சிக்கனமான ஆளு இந்த நிலையில் அவங்க பில்லு கட்டற போனை எடுத்து மணிக்கணக்கா பேசிகிட்டிருந்தா பேயாடிடுவாங்க...

வீட்ல ஹாலில் இருந்த காலர்-.டி இல்லாத BSNL போன்நண்பேன்டா...” ன்னுது.

மாமியார் அசந்த நேரம் பார்த்து self- ring  அடிக்கும் நம்பரை அழுத்திட்டு ஓடிப்போய் கிச்சன்ல நின்னுப்பேன்.

ட்ர்... ட்ர்.... ட்ர்....

போன் வருது மாமி.... “டி.வியை மியூட்ல வச்சிட்டு நாம் பேசி பார்க்கற மாதிரி ஓண்ணுமே பேசாத ரிசீவரை காதுல வச்சிகிட்டுஹலோ...” “  அம்மா எப்படி இருக்கிறே? சாப்பிட்டியா? இப்படி டப்பிங் கொடுத்துகிட்டே...   பப்பரப்பான்னு நின்னுக்கிட்டு போனை மறைச்சி சைக்கிள் கேப் என் வீட்டு நம்பரை அழுத்தி, அங்க புதுசா வர்றஹலோவுக்கு நாந்தாம்மாங்கிறதை மணிரத்னம் படத்துல வர்ற டப்பிங் மாதிரி சொல்லிட்டு அப்புறமா  ம்  நானும் சாப்பிட்டேன்.... “ இப்படியே கன்டினியூ ஆகும்.

(ஒவ்வொரு சமயம் எங்க மாமியார் டக்குனு போய் எடுப்பாங்க.. அந்த பக்கம் மியூட்னு தெரியாமகட் ஆயிடுச்சின்னு சொல்லிகிட்டே போவாங்க பாருங்க....)

(“விடுங்க மாமி... வேணும்னா இன்னொரு முறை பண்றாங்க... 
!”)

என் ஹஸ்அடிப்பாவி எங்க அம்மா கிட்ட போட்டுகொடுக்கிறேன் இரு...”  என்று சும்மா சொன்னாலும் என் குறும்பை ரசிச்சி சிரிச்சி விட்டுடுவார்.

அப்புறமா போன் பில்லு அதிகமா வருதுன்னு ரிலையன்ஸ் காலர்- .டி யோட வச்சிட்டாங்களா  நாமளும் அதுக்கப்பறம் மொபலை சரணடைஞ்சிட்டோம். ஹி... ஹி..!

 அடப்பாவமே இப்படியாக சொல்லிக்கொண்டிருக்கையில் மீன் ஆபிசில் நைஸாக டைப் பண்ணிக்கொண்டிருக்கையில் கிர்... கிர்...என் மொபைல் அதிருது... ரொம்ப அர்ஜெண்ட்னா தவிர என்னை சேர்ந்தவங்க யாரும் ஆபிஸ் டைமில் போன் பண்ண மாட்டாங்களே... எதிரில் M.D வேறு இருக்கிறாரே என்று தேஞ்சு போன ரெகார்டாட்டம் மெல்ல ஹலோ என்கிறேன்...

ஹலோ நாங்க  நியூ இண்டியா இன்ஷ்யூரன்ஸ்லர்ந்து பேசறோம் ஒரு கணக்கெடுப்புக்காக கோவை மாவட்டத்திலிருந்து இது எந்த மாவட்டங்க.....? ஒரு லேடி...

 படக்குன்னு போனை ஆப் பண்ணிட்டேன். “ ஆத்தாடி...உன் ஆபிசு வேலைய  நீ பார்க்கிற... என் ஆபிசு வேலைய நான் பார்க்க வேணாமா?!

அது உண்மையிலே இன்ஷ்யூரஸா இல்ல .. என்னையும் கலாய்ச்சு பார்க்கலாம்னு வந்த போனான்னு தெரியலை....  ஆபிஸ் முடிஞ்சு 6 மணிக்கு மேல வந்திருந்தா கொஞ்சம் ஓட்டியிருக்கலாம்.... தப்பிச்சாங்க....மேமு !

(‘ சொல்லுகிறேன்னுட்டு இப்படி கொல்லுகிறேன் ன்னு  நினைக்கிறீங்களா இன்னு நிறைய கொல்ல ச்சே சொல்ல வேண்டியிருக்கு.... !)

தொடரும்.....