Friday 4 May 2012

பேனா முனையில் பேசியது.




கற்பனைகள் அற்புதமானவை. கற்பனைக்கு செலவு இல்லை.
சந்தோஷம் ம்ட்டுமே வரவு. கற்பனை பேராசையாக மாறாமல்
இருக்கணும். நீங்க இருக்கிற இடத்தில் பச்சை பசேல் புல்வெளி,
உயர்ந்த மரங்கள். கண்ணை கொஞ்சும் வண்ண மலர்கள்.. இதமான
காற்று , சுகமான குளிர்.. தூரத்தே மலைச்சாரல் ! கட்டிலில்
படுத்துக் கொண்டு ஆனந்தமாய் மனசை கவ்வும் பாடல் கேட்டபடி
இருக்கிறீர்கள்! இப்படி கற்பனை செய்து பாருங்கள். அக்கணம் நிச்சயம்
சந்தோஷம் பூக்கும்.
இன்னொரு கற்பனை , பெரீய்ய பங்களா, தங்கம் . வைரம், பிளாட்டினம்
என குவியல் குவியலாய் இருக்கும் அணிகலன்களை விருப்பம் போல்
எடுத்து அலங்கரித்து கொள்கிறீர்கள். ஐஸ்வர்யா ராயே பொறாமை
படுகிறார். உங்கள் பிறந்த நாள் பரிசாக உங்கள் கணவர் அழகான
சொகுசு கப்பலை காட்டுகிறார். ஓடிச் சென்று ஆசையாய் ஏறி
உட்கார்ந்து போகிறீர்கள். இப்படியும் கற்பனை செய்து பாருங்கள்.
ஆனந்தமாய்த்தான் இருக்கும்.
முதல் கற்பனையில் சந்தோஷத்தோடு ஒரு நிம்மதி! இரண்டாவது
கற்பனையில் சந்தோஷத்தோடு ஒருபொறாமையோ,போட்டியோ எழும். அது
சந்தோஷத்தை விழுங்கி விடும். உங்கள் கற்பனை ரசனையாய் ,
நகைச்சுவையாய் இருக்கட்டுமே..!

( செப்டம்பர் 3 , 2011 தினமலர்- பெண்கள் மலரில் ஸ்ரீ பக்கத்தில்)