Friday 4 May 2012

என் பக்கம்

பெற்றோரிடம் பிரியம் காட்டுங்க

இப்பொதெல்லாம் நிறைய பெற்றோர்கள் தனிமையில்தான்
வசிக்கிறார்கள்.வயதானால் கவனக்குறைவும், சலிப்பும்
ஏற்படும்.எனவே வேலை விஷயமாக வெளியூரில் வசிக்கும்
பிள்ளைகள் போன் செய்து சாப்பிட்டீர்களா, என்ன செய்தீர்கள்,
ஞாபகமாக காஸை ஆப் செய்யுங்கள், வீட்டு கதவை தாழ்
போட்டுக்கொள்ளுங்கள், தனியாக எங்கும் செல்லாதீர்கள் என்று
அக்கறையோடு அடிக்கடி சொல்லுங்கள். இருபது ஆண்டுகள்
உங்களுக்காகவே வாழ்ந்தவர்களை ஐந்து நிமிட பேச்சிலாவது ஆறுதல்
அளியுங்கள்.நம் மீது பிள்ளைகள் அக்கறையாக இருக்கிறார்கள் என்ற
சந்தோஷமே அவர்களை தெம்பாகவும், விழிப்பாகவும் இருக்க
செய்யும்.
(11-12-2010 தினமலர்- பெண்கள் மலரில் வந்தது)