Wednesday 9 May 2012

என் பக்கம்- தற்கொலை தீர்வாகாது

என் பக்கம்
தற்கொலை தீர்வாகாது

எனக்கு தெரிந்த வீட்டில் திருமணமாகி இரண்டே வருடங்கள் ஆன
இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும்
அந்த பெண் நிறைய நகை, கார் என சகல வசதிகளோடு வந்தவர்.
வசதியாக வளர்ந்துவிட்ட அந்த பெண்ணிற்கு சமையல் வேலை,
வீட்டு வேலை அவ்வளவாக செய்ய தெரியாதல் மாமியார் குறை
கூறிக்கொண்டே இருந்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட தகறாரில் அந்த
பெண் எடுத்த முடிவு இது. நன்றாக படித்த அந்த பெண் தனித்து
வாழ்ந்திருக்கலாம். மாமியார்கள் எப்போதும் மருமகள் தன் சொல்படி
நடக்கவேண்டும் என்ற ஈகோவில்தான் சண்டை போடுவார்கள்.
ஆனால் மருமகள் சாக வேண்டும் என்ற கொடூர எண்ணம் எந்த ஒரு
பெண்ணிற்கும் வராது. மருமகள்கள் தற்கொலை ஒரு முடிவல்ல
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மாமியார்களும் காலம் எவ்வளவோ மாறிவிட்டதை புரிந்து
கொள்ள வேண்டும். இன்னும் அடுப்படி சண்டை
போட்டுக்கொண்டிருக்காமல் அவர்கள் வாழ்க்கையை அவர்களிடமே விட்டு விடுங்க. இளைய தலைமுறையினர் எல்லாவற்றையும்தானாகவே தெரிந்துகொள்வார்கள்.
( 25-09-2010 தினமலர்- பெண்கள் மலர் எங்கள் பக்கத்தில்.)