Wednesday 9 May 2012

பேனா முனையில்...
பார்த்தது:

என் மகள் பயிலும் பரத நாட்டிய பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சிக்குசென்றிருந்தேன். அங்கே நிகழ்ச்சியை காண பொது மக்கள்உட்கார்ந்திருந்தார்கள். நிறைய பேர் காமிராவில் நிகழ்ச்சியை படம்பிடித்து கொண்டிருந்தார்கள்.எனக்கு முன் உட்கார்ந்திருந்தஒருவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும், அவருடைய கேமிராவில் முன்வரிசையில் உட்கார்ந்திருந்த பெண்ணின் முதுகையே ஜூம் செய்து கொண்டுருந்தார்.யாராவது அதை கவனித்தால் உடனேமேடையை படம் பிடிப்பது போன்று பாவ்லா செய்தார்.அவர் படம் பிடித்த பெண் போட்டிருந்த பிளவுஸ் ரொம்பவும் கவர்ச்சியாக இருந்தது.பெருக்கல் குறி ஸ்டைலில் பிளவுஸின் டிசைன் இருந்தது.சினிமா கதாநாயகிகள் போல ஆடை அணிந்தால் ஆபத்துதான்.சினிமா வேறு.. நிஜம் வேறு... என்பதை பெண்கள் புரிந்து கொண்டு நாகரீகமாக உடையில் வந்தால் ஆண்களின் பார்வை ஏன் பெண்களின் மேல் விழப்போகிறது.
(மே-28, 2011 பெண்கள் மலர் ஸ்ரீ பக்கத்தில் )