Friday 4 May 2012

என் பக்கம்

முதியோர் ஸ்பெஷல் பஸ் விடலாமே...?!

எல்லா ஊர்களிலும் மாநகர பேருந்துகளில் கூட்டம் அலை
மோதுகிறது. இதில் சிக்கி சின்னா பின்னமாவது குழந்தைகளும்,
முதியவர்களும்தான். குழந்தைகளாவது முண்டியடித்து உள்ளே
நுழைந்து விடுவார்கள்.முதியவர்கள் பாடுதான் பெரும்
திண்டாட்டம். பெரும்பாலான முதியவர்கள் மூட்டு வலியால்
திண்டாடுகிறார்கள். இதில் பஸ்ஸின் படிகட்டு உயரமாக இருக்கும்
போது அவர்களால் மெதுவாகத்தான் ஏறி இறங்க முடிகிறது.
அதுவரை பொறுக்க முடியாத நடத்துனர்கள் " ஏன் பெருசு
காலைலேயே வந்து உயிரை வாங்கிற.. வயசாயிடுச்சில்ல.. வீட்டிலேயே
இருக்க வேண்டியதுதானே... ' என்று வயதிற்கு கூட மரியாதை
கொடுக்காமல் கண்டபடி பேசுகிறார்கள். நமக்கும் ஒரு நாள்
வயதாகும் என்று யாரும் நினைப்பதில்லை. இதை தவிர்க்க மகளிர்
ஸ்பெஷல் பஸ் போன்று முதியவர்களுக்கும் ஸ்பெஷல் பஸ்
விடலாமே..!

( தின மலர் - பெண்கள் மலர் எங்கள் பக்கத்தில் ஜுன் 19 , 2010 வெளிவந்தது)